பக்கம் : 1089
 
  புரிமணிக் குழல்புறந் தாழப் போந்தரோ
கருமணி யொளியவன் கழல்சென் றெய்தினாள்.
 
     (இ - ள்.) அருமணி முடியவன் அருள் இது என்றலும் - பெறற்கரிய
மணிகளானியன்ற முடியை உடைய உன்தந்தையின் பணி இஃதென அவ்வேவல் மகளிர்கள்
கூறியவுடனே, பாவை - சோதிமலை, பருமணிப் பந்து கைவிட்டு - பரிய அழகுடைய
பந்தாடுதலைத் தவிர்ந்து, தன் புரிமணிக்குழல் புறந்தாழ - தனது விரும்பற்குரிய நீலமணி
போன்ற நிறமுடைய அளகம் புறத்தே வீழும்படி, போந்து - வந்து, கருமணி ஒளியவன் -
நீலமணி வண்ணனாகிய திவிட்டனுடைய, கழல்சென்று எய்தினாள் - திருவடிகளை
அடைந்தான், அரோ: அசை, (எ - று.)

     சோதிமாலை பந்தாடுதலைக் கைவிட்டுத் தந்தையிடம் சென்றனள் என்க.

(628)

 
1759. செல்வியின் எழில்நலங்கண்டு திவிட்டன் மகிழ்தல்
மங்கையை வலப்புடைக் குறங்கின் மேலிரீஇ
அங்கையா லணிநுத லரும்பு நீர்துடைத்
தெங்குமி லுவகையோ டினிதி ருந்தபின்
நங்கைத னலங்கிளர் மேனி நோக்கினான்.
 
     (இ - ள்.) மங்கையை வலப்புடைக் குறங்கின் மேல் இரீஇ - சோதிமாலையைத்
திவிட்டன் தனது வலப்பக்த்துத் தொடையின் மேல் அமரச் செய்து, அங்கையால், அணி
நுதல் அரும்பும் நீர் துடைத்து - தன் அழகிய கைகளாலே அவளது அழகிய நெற்றியில்
அரும்பியுள்ள வியர்வைநீரைத் துடைத்து, எங்கும் இல் உவகையோடு இனிது இருந்தபின் -
எவ்விடத்தேயும் பெறலரும் பெருமகிழ்ச்சியோடே இருந்தபின்னர், நங்கை தன் நலங் கிளர்
மேனி நோக்கினான் - சோதிமாலையின் அழகு மிக்க திரு மேனியின் மாண்பினைப்
பார்த்தனன், (எ - று.)

     திவிட்டன் சோதிமாலையைப் பார்க்க நேர்ந்தகாரணம் அவளுடைய
பருவமுதிர்ச்சியின் சிறப்பே என்க.

     சோதிமாலையைத் தன் வலப்பக்கத்துத் தொடையிலே அமரச்செய்து நுதலின்கண்
வியர்வையைத் துடைத்து உவகையோடே இருந்து அவள் மேனியை நோக்கினான் என்க.

(629)

 
இதுவுமது
1760. இளமையா லெழுதரு மிணைமென் கொங்கையின்
வளமையாற் பொலிதரும் வனப்பின் மாட்சியால்