வியர்வையைக் காயுமாறு செய்தலால் தானும் மணத்தினைப் பெற்ற தென்றற் காற்றானது மீண்டும் மாளிகைகளிடத்திலே சென்று வீசுமாறு வெள்ளிலோத்திர மரங்கள் பொருந்திய பொழிலிலே சென்று மேலும் மணப்பெருக்கையும் குளிர்ச்சியையும் பெறும் என்க. வெள்ளிலோத்திரம் என்பது மணமும் குளிர்ச்சியும் ஒருங்கமைந்த ஒருவகை மரம். |
( 16 ) |
பலவகை மரங்கள் |
135. | ஆந்து ணர்த்த மாலமும்ம சோக பல்ல வங்களும் தாந்து ணர்த்த சந்தனத் தழைத்த லைத்த டாயின மாந்து ணர்ப்பொ தும்பர்வந்து 1வைக மற்ற தூன்றலால் தேந்து ணர்ச்சு மந்தொசிந்த சைந்த தேவ தாரமே. |
(இ - ள்.) ஆம்துணர் தமாலமும் - புதிதாக மலர்ந்த பூங்கொத்துக் களையுடைய தமால மரங்களும்; அசோக பல்லவங்களும் - அசோக மரத்தின் தழைகளும்; துணர்த்த சந்தனத் தழைத்தலை - பூங்கொத்துக்களை யுடையவாகிய சந்தனத்தழையின் மேல்; தடாயின - வளைந்து பொருந்தின. மாந்துணர்ப் பொதும்பர் வந்து வைக - மாமரங்களின் பூங்கொத்துக்களோடு கூடிய கிளைச்செறிவு வந்து தம்மேல் தங்க; அது ஊன்றலால் - அக்கிளைச் செறிவு அழுத்துதலால்; தேவதாரம் - தேவதார மரங்கள்; தேந்துணர் சுமந்து ஒசிந்து அசைந்த - தமது தேனையுடைய பூங்கொத்துக்களுடனே அந்தச் சுமையையுந் தாங்கித் துவண்டு மெலிந்தன. (எ - று.) தேவதார மரங்கள் மாங்கிளைச் செறிவு ஊன்றுதலாகிய செயற்கைப் பாரத்தின் மிகுதியைத் தாங்கமாட்டாமல் துவண்டு மெலிந்தன என்பதாம். மாந்துணர் - மரப்பெயர் முன்னர் இனமெல்லெழுத்து வரப்பெற்றது. பல்லவம் - தளிர். தமாலம் - பச்சிலைமரம். |
( 17 ) |
இன்ப துன்பம் |
136. | 2தெய்வ யாறு 3காந்தளஞ்சி லம்பு தேங்கொள் பூம்பொழில் பௌவ முத்த 4வார்மணற்ப றம்பு மௌவன் மண்டபம் எவ்வ மாடு மின்னபோலி டங்க ளின்ப மாக்கலால் கவ்வை யாவ 5தந்நகர்க்கு மாரனார் செய் கவ்வையே. |
|
|
(பாடம்) 1. வைகி. 2. தெய்வநாறு. 3. காந்தளும். 4. வார் மணற் பிறங்கன். 5. தந்நகர்க் காமனார்செய். |