பக்கம் : 1090 | | | | குளமையா னறவிரி குவளைக் கண்ணியான் 1உளமயா வு 2யிர்ப்பதோ ருவகை யெய்தினான். | (இ - ள்.) இளமையால் - சோதிமாலையின் இளமைப் பருவத்தானும், இணை மென் கொங்கையின் வளமையால் - இரண்டாகிய மென்மையுடைய முலைகளின் எழுச்சிவளத்தானும், பொலிதரும் வனப்பின் மாட்சியான் - விளங்கும் அழகினது பெருமையாலும், குளம் ஐயால் நற விரி குவளைக் கண்ணியான் - நெற்றியின் எழிலானும தேன் பிலிற்றும் குவளைமலர் மாலையையுடைய திவிட்டன், உளம் அயாவுயிர்ப்பதோர் உவகை யெய்தினான் - நெஞசம் தாங்காதே அயாவுயிர்த்தற்கு ஏதுவாகிய பெரியதொரு மகிழ்ச்சியுடையன் ஆனான், (எ - று.) அயா வுயிர்த்தல் - அளவிகந்த இன்பமாதல், துன்பமாதல் உளத்தை நிரப்பியபோது மனம் அதன்கண் அழுந்தித் தன்வய மிழந்த பின்னர் மீண்டும் ஒருவாறு தன்வயப்படுங்கால் ஒரு பெருமூச்செறிதல். குளம் - நெற்றி, நீர்நிலை முதலிய பலபொருள் தரும் ஒருசொல். குளமையால் - நீர்நிலையின் சிறப்பினாலே, நறவிரி - தேனை மிகுதியாகப் பொழியும் எனப் பொருள்கொண்டு திவிட்டனுக்கு அடையாக்கினும் அமையும். | (630) | | திவிட்டன் சூழ்ச்சிமன்றம் எய்துதல் | 1761. | செல்வியைத் திருக்குழ றிருத்தித் தேவிதன் அல்குன்மே லினிதினங் கிருவி யாயிடை மல்குபூ மந்திர சாலை மண்டபம் பில்குபூந் தெரியலான் 1பெயர்ந்து போயினான். | (இ - ள்.) செல்வியை - சோதிமாலையை, திருக்குழல் திருத்தி - அழகிய அளகத்தைத் தன்கைகளால் ஒப்பனை செய்து, தேவி தன் அல்குல் மேல் இனிதின் அங்கு இருவி ஆயிடை - சுயம்பிரபையின் மடிமேல் இனிதாக அவ்விடத்தே இருத்திய பின்னர், மல்கு பூ மந்திரசாலை மண்டபம் - மலர் மிக்க சூழ்ச்சி மண்டபத்திற்கு, பில்கு பூந் தெரியலான் -தேன் துளிக்கும் மலர்மாலை அணிந்த திவிட்டமன்னன், பெயர்ந்து போயினான் - எழுந்து சென்றான், (எ - று.) சோதிமாலையின் பருவமுதிர்ச்சியைக் கண்ட திவிட்டன் அமைச்சர்களைக் கலந்து சோதிமாலையின் திருமணத்தைப்பற்றி முடிவு செய்தற்கு அவ்விடத்தைவிட்டு அகலலாயினன் என்க. | (631) | |
| (பாடம்) 1 உளமையா. 2 உறுவதோ. 3பெயர்ந்த தெய்தினான். | | |
|
|