பக்கம் : 1091 | | சுயம்வர முரசறைகெனல் | 1762. | அருத்தநூ லவரொடு மாய்ந்து மற்றவர் கருத்தொடு பொருந்திய கருமச் சூழ்ச்சியான் திருத்தகு 1சுயம்வர முரசந் திண்களிற் றெருத்தின்மே லறைகென விறைவ னேயினான். | (இ - ள்.) அருத்தம் நூலவரொடும் ஆய்ந்து - பொருள் பொதிந்த மெய்ந்நூற் பயிற்சி மிக்க அமைச்சர்களுடனே ஆராய்ந்து, மற்றவர் கருத்தொடு பொருந்திய கருமச் சூழ்ச்சியான் இறைவன் - அவ்வமைச்சர்களுடைய கருத்துடன் ஒத்த ஆள்வினைத் திறமுடைய திவிட்ட மன்னன், திருத்தகு சுயம்வர முரசம் - மாண்புமிக்க சுயம்வரச் செய்தியை அறிவித்தற்கியன்ற முரசினை, திண் களிற்று எருத்தின்மேல் அறைகென - திண்ணிய அரசுவாவின் எருத்தின்மேல் ஏறியிருந்து முழக்கி அறிவிப்பீராக என்று, ஏயினான் - முரசறை மரபினர்க்குப் பணித்தான், (எ - று.) சோதிமாலைக்குச் சுயம்வரம் ஏற்படுத்தித் திருமணம் புரிவித்தலே சிறப்புடைத்தென, அமைச்சர்களைக் கலந்தெண்ணியதில் முடிவேற்பட்டமையின் சுயம்வரமுரசு அறையச் செய்தனன், என்க. | (632) | | 1763. | வாலிய 2சந்தமென் சேறு மட்டித்துப் பீலியந் தழையொடு பிணையல் வேய்ந்தன 3பாலியல் பலிபெறு முரசம் 4பண்மையில் ஆலியங் கதிர்கொள வதிர்ந் தறைந்தவே. | (இ - ள்.) வாலிய சந்த மென் சேறு மட்டித்து - தூய்மையுடைய, சந்தனத்தின் மென்மைமிக்க குழம்பை நீவி, பீலி அம் தழையொடு - மயிற்பீலியும் அழகிய தழையும், பிணையல் வேய்ந்தன - மலர்மாலையும் சூட்டப்பட்டனவாகிய, பாலியல் பலிபெறு முரசம் - ஆன்பாலானியன்ற பலியைக் கொள்ளும் முரசங்கள், பண்மையில் - இனிமையோடே, ஆலி அதிர் கொள - ஆரவாரித்து அதிரும்படி, அதிர்ந்து அறைந்த - அதிர்ந்து முழுங்கின, (எ - று.) சோதிமாலையின் சுயம்வரச் செய்தியைப் பலிபெறு முரசம் அதிர்ந்து முழங்கி அறிவித்த தென்க. | (633) | |
| (பாடம்) 1 சயம்வர. 2 சந்தன. 3 பரவியல். 4 பன்மையில். | | |
|
|