பக்கம் : 1094
 

      (இ - ள்.) கொடிபடு நெடுநகர்க் கோயில் வீதிவாய் - கொடிகள் உயர்த்தப்பட்ட
நீளிய நகரத்தின்கண் அரண்மனை வீதிகளிலே, இன்னணம் - இவ்வாறு, இடிபடு
மழைமுகில் என்ன இடிக்கின்ற மழைமுகிலைப் போன்று, கடி படு முரசு கண் அதிர்ந்த -
மணமுரசம் தம் கண்ணதிர்ந்து முழங்கினவாக, மாடவாய் மடிபடு மயில்கள் கார் என
மான்றவே - மேனிலைமாடத்தே உறைகின்ற மயில்கள் இவண் முழங்குவது முகிலேயோ
என மயங்குவன வாயின, (எ - று.)

     முரசொலி கேட்ட மயில்கள் இவ்வொலி முகிலினாலாயதோ என்று உள்ளந்
திகைத்தமை இதில் உணர்த்தப்பட்டது.

(637)
 

சுயம்வர விழாவிற்கு மன்னர் முதலியோர் வருதல்

1768. முரசொடு வரிவளை மூரித் தானையோ
டரசரு மரசரல் லாரு மாயிடைத்
திரைசெறி கனைகடல் சென்று 1தேர்த்தெனப்
புரைசெறி புரிசையின் புறணி முற்றினார்.
 
     (இ - ள்.) முரசொடு - முரசுகளுடனேயும், வரிவளை (ஒடு) - வரிகளையுடைய
சங்குகளுடனேயும், மூரித்தானையோடு - பெரிய படையுடனேயும், அரசரும் -
வேந்தர்களும், அரசரல்லாரும் - வேந்தரல்லாத ஏனைய மாந்தரும், ஆயிடை -
அப்பொழுது, திரை செறி கனை கடல் சென்று தேர்த்தென - அலைகள் நெருங்கிய
முழக்கமுடைய கடல்கள் புடைபெயர்ந்து சென்று தேங்கினாற் போன்று, புரைசெறி
புரிசையின் புறணி முற்றினார் - உயர்ச்சியும் திண்மையுமுடைய மதிலின் புறநிலத்தே சுற்றிச்
சூழ்ந்தனர், (எ - று.)

     சுயம்வர அறிவிப்பொலியைக் கேட்டு மன்னரும் பிறரும் வந்து கூடினர் என்க.
புரை - உயர்வு, செறி - செறிவு.

(638)

 
 
1769. வெண்மலைச் சென்னிமேல் விஞ்சை வேந்தரும்
கண்மலைத் 2திழிதருங் கடலந் தானையர்
விண்மலைத் 3திழிதரும் விளங்கு சோதியர்
எண்மலைச் சிலம்பிடை யிறைகொண் டீண்டினார்.
 
     (இ - ள்.) வெண்மலைச் சென்னிமேல் சிலம்பு எண்மலை இடை விஞ்சை வேந்தரும்
- இமயமலையி்ன் உச்சியிடத்தேயுள்ள எதிரொலியுடைய எட்டு மலைகளாகிய இடங்களிலே
ஆட்சிசெய்யும் விச்சாதர வேந்தர்களும், கண்மலைத்து இழிதரும் கடல் அம் தானையார் -
கட்பொறியை அடர்த்து

     இறங்குதலையுடைய கடல் போலும் மிக்க அழகிய படையை உடையராய்,
விண்மலைத்து இழிதரும் விளங்கு சோதியர் - விசும்பெலாம் கவர்தருமாறு
 
     (பாடம்) 1 தொத் தெனப், 2 திகழ்தரும். 3 தெழுதரும்.