பாயும் மிக்க ஒளியையுடையராய், இறைகொண்டு - தம் இறையாகிய அருக்கமன்னனை அழைத்துக்கொண்டு, ஈண்டினார் - வருவாராயினர், (எ - று.) மலைச்சிலம்பு - சிலம்புமலை - எதிரொயையுடைய மலை யென்க. எண்மலை - வருத்தமானம் முதலியன. கண்மலைத்தல் - கண்கொளாப் பரப்பிற்றாதல். விண்மலைத்தல் - விண்ணை அகப்படுத்தல். விஞ்சை வேந்தர் கடல்போன்ற படையோடே தம் இறைவனை அழைத்துக் கொண்டு ஈண்டினார் என்க. |
(639) |
அருக்ககீர்த்தியின் வருகை |
1770. | அவ்வரை யரைசர்கோ னருக்கன் றன்மகன் செவ்வரை யனையதோட் செல்வன் றன்னொடும் மைவரை நெடுங்கணம் மடந்தை தன்னொடும் இவ்வரை யரைசெதிர் கொள்ள வெய்தினான். |
(இ - ள்.) அவ் வரையரசர் கோன் - அம் மலைமன்னர்கட்கு இறையாகிய, அருக்கன் - அருக்ககீர்த்தியும், தன்மகன் செவ்வரை அனையதோள் செல்வன் தன்னொடும் - தன்மகனாகிய செவ்விய மலைபோன்ற தோள்களையுடைய அமிததேசன் என்பானொடும், மைவரை நெடுங்கண் அம்மடந்தை தன்னொடும் - மை தீட்டப்பெற்ற நெடிய கண்களையுடைய அழகியாகிய சுதாரை என்னும் தன் மகளோடும், இவ்வரை யரைசு எதிர்கொள்ள - இம் மலைமன்னர் எதிர்கொண்டழைத்து உடன்போத, எய்தினான் - போதன நகரத்தை அடைந்தான், (எ - று.) திவிட்டனுடைய மைத்துனனாகிய அருக்கதீர்த்தி தன்மகனோடும் மகளோடும் வருதல் உரைக்கப்பட்டது. |
(640) |
|
திவிட்டன் அருக்ககீர்த்தியை எதிர் கோடல் |
1771. | பொன்னகர்ப் புறத்ததோர் புரிசை வார்பொழில் தன்னகத் தியற்றிய தயங்கு பொன்னகர் மன்னர்கட் கிறைவன்வந் திருப்ப மண்மிசை இந்நகர்க் கிறைவனு மெதிர்கொண் 1டெய்தினான். |
|
|
(பாடம்) 1 டெய்தினார். |