பக்கம் : 1097 | | (இ - ள்.) இருபுடைக் கிளைகளும் இன்னணம் விரவி - இருதிறத்துச் சுற்றமும் இவ்வாறு தம்முட் குழீஇ, தெருவுடைத் திசைமுகம் தெளிப்பத் தேர்த்து - தெருக்களையுடைய திசைகளின் பகுதிகள் விளங்கும்படி தேங்குதலானே, மருவுடை மகரம நீர் வளாகம் - மகரமீன்கள் மருவி வாழ்தலுடைய கடல் சூழ்ந்த இந் நிலவுலகத்தின்மிசை, வானவர் - தேவர்களுடைய, உருவுடை உலகம் வந்து - எழிலுடைய விண்ணுலகம் விரும்பி வந்து, இழிந்தது ஒத்ததே - இறங்கியதை ஒத்துத் தோன்றியது (எ - று.) தேர்த்து - தேங்கி; இதனைச் செயவெனெச்சமாக்குக. திவிட்டநம்பி அருக்ககீர்த்தியாகிய இரு பேரரசருடைய சுற்றமும் ஒன்று கூடித் தேங்காநிற்ப வானவருலகம் இம்மண்ணுலகை விரும்பி வந்திறங்கியதை ஒத்துத் தோன்றிற்று அக்காட்சி என்க. | (643) | | சுயம்வர மாளிகை எடுத்தல் | 1774. | சிகைமணி யழுத்திய செம்பொற் சென்னிய நகைமணிக் கோபுர வாயி னான்கொடு வகைமணித் தலத்ததோர் மதலை மாளிகை தொகைமணித் தொழில்பல தொடரத் தோற்றினார | இதுமுதல் 9 செய்யுள் ஒரு தொடர் (இ - ள்.) சிகை மணி அழுத்திய செம்பொன் சென்னிய - முடியின்கண் மணிகள் பதிக்கப்பட்ட செவ்விய பொன்னாலியன்ற தலைகளையுடைய, நகை மணிக் கோபுர வாயில் நான் கொடு - திகழ்கின்ற அழகிய கோபுரவாயில்கள் நான்குடைத்தாய், வகை மணித் தலத்ததோர் மதலை மாளிகை - ஒன்பான் வகை மணிகளானும் தளமிடப்பட்டதொரு துணை மாளிகையை, தொகை மணித் தொழில்பல தொடர - தொகுக்கப்பட்ட மணித்தொழில் திறம் பல நிரல்படும்படி, தோற்றினார் - புதுவதாக அமைக்கலாயினர், (எ - று.) மதலைமாளிகை - ஈண்டு சிறப்பின்பொருட்டு இயற்றும் துணை மாளிகை என்க. மதலை, தூணுமாம். சோதிமாலையின் சுயம்வரம் நிகழ்த்துதற் பொருட்கு மணியழுத்திய செம்பொற் கோபுரங்களை யுடையதாய்த் தளமிடப்பட்ட மதலை மாளிகை புதுவதாகத் தோற்றுவித்தனர் என்க. | (644) | | 1775. | பளிங்கியல் பலகையும் பவழத் தூண்களும் விளங்குபொற் கலங்களும் வெள்ளி வேயுளும் இளங்கதிர் முத்தமு மியற்றி யின்னணம் வளங்கவின் றனையதம் மதலை மாடமே. | |
| | | |
|
|