பக்கம் : 1099 | | (இ - ள்.) அங்கு அதற்கு ஐந்து கோல் அளவின் - அவ்விடத்தே அவ் வேதிகையினின்றும் ஐந்து கோல் தொலைவிடத்து, ஆடரங்கு இங்கு வந்து இறுத்தனவென்னும் ஈட்டன - அரம்பையர் ஆடும் அரங்கு, இவ்விடத்தே இறங்கி வந்து தங்கின வென்று கூறும்படி பெருமை யுடையனவாய், செங்கதிர் பவழக்கால் நிரைத்த - செவ்விய ஒளியுடைய பவழத் தூண்கள் நிரலாக நிறுத்தப்பட்டனவும், மங்கலச் செய்கைய - அழகிய தொழிற்றிறன் அமைந்தனவும், மஞ்சு சூழ்ந்தவே - முகில்கள் தவழ்வனவும், (எ - று.) அவ் வேதிகையினின்றும் ஐந்துகோல் தொலைவின்கண் அரம்பையர் ஆடரங்கு போன்றனவும் பவழக்கால் நிரைத்தனவும் மங்கலச் செய்கை செய்தனவும் மஞ்சுசூழ்ந்தனவுமாய் என்க. (1781) சயமர மாளிகைகள் இயற்றி என முடித்திடுக. | (647) | | 1778. | விளிம்பிடை மரகர வேதி கட்டிய வளம்பெறு மணிநகை 1மஞ்ச மீமிசை இளம்பெருஞ் சுரியுளை யரிதின் றேந்திய உளம்பொலி யாசன முயர விட்டவே. | (இ - ள்.) விளிம்பிடை - ஓரங்களிலே, மரகத வேதி கட்டிய - மரகத மணிகளாற் றிண்ணைகள் அமைத்தனவும், வளம்பெறு மணிநகை மஞ்சம் மீமிசை - வளமிக்க மணிகள் திகழ்கின்ற கட்டில் மேல், இளம் பெரும் சுரியுளை அரிநின்று ஏந்திய - இளமையுடையதும் பருத்ததும் சுருண்ட பிடரி மயிரையுடையதுமாகிய அரிமான் நின்று தாங்குகின்ற, உளம் பொலி ஆசனம் உயரவிட்டது ஏ- உள்ளம் மகிழ்ச்சியாற் பொலிவதற்குக் காரணமான அரியணைகள் உயர்ந்து விளங்கும்படி இடப்பட்டனவும், (எ - று.) மரகத வேதி கட்டப்பட்டனவும், மஞ்சமீமிசை அரிநின்றேந்திய ஆசனங்கள் உயரவிட்டனவாய் என்க. | (648) | | | 1779. | மண்டங்கு மகரவா சனத்து மென்மயில் கண்டங்கள் புரைவன கனபொற் கொட்டைய அண்டங்கொ ளன்னமென் றூவி யார்த்தன எண்டங்கு மணியன வியற்றப் பட்டவே. | (இ - ள்.) மண்டங்கும் மகரவாசனத்தும் - மண்ணிடத்தே தங்குதலையுடைய மகரமீன் வடிவினவாய்ச் செய்த ஆசனங்களும், மென்மயில் கண்டங்கள் புரைவன - மென்மையுடைய மயிலின் கழுத்துக்களை ஒப்ப, கனபொற் கொட்டைய - கனவிய பொன்னாலியன்ற கொட்டைகளை யுடையனவும், அண்டங்கொள் அன்ன மென்தூவி ஆர்த்தன - முட்டைகளைக் கொண்ட அன்னப் பறவைகளின் மெல்லிய தூவிகள் செறிக்கப்பட்டனவும், எண்தங்கு மணியன - உள்ளம் சென்று பதிவதற்குரிய மணிகள் பதிக்கப்பட்டனவும் ஆக, இயற்றப்பட்ட - அமைக்கப்பட்டன,(எ - று.) | |
| (பாடம்) 1 வஞ்ச. | | |
|
|