அரிகுலத்தே தோன்றிச் சூரியபுரத்தை ஆள்கின்ற அரசன் ஆரந்தாங்கிப் பகடுந்திக் குஞ்சி தாழப் புகழப் புக்கான் என்க. அரிகுலம் ஐம்பெருங் குலத்துள் ஒன்று. |
(658) |
|
|
மதுரை மன்னன் வருகை |
1789. | 1சொன்மலர்ந் துலக மேத்துஞ் சுடரவன் மருகன் 2றோலா மன்மலர்ந் திலங்கு செய்கை வளங்கெழு மதுரை யாள்வான் தென்மலை வளர்ந்த தெய்வச் சந்தனந் திளைத்த மார்பன் மின்மல ராரந் தாங்கி வியனகர் விரும்பப் புக்கான். |
(இ - ள்.) உலகம் சொல் மலர்ந்து ஏத்தும் சுடரவன் மருகன் - சான்றோர்கள் தம் தூய சொற்களை விரித்துப் பாடித் தொழுகின்ற திங்கள் மரபினனும், மலர்ந்து இலங்கு மன்செய்கை தோலா - விரிந்து விளங்கும் மன்னவர்தம் மாண்புடைய அறத்தொழிலின்கண் தோல்வியுறாத, வளங்கெழு மதுரை ஆள்வான் - வளமிக்க மதுரை மாநகரத்தை ஆள்பவனுமாகிய பாண்டியன், தென்மலை வளர்ந்த தெய்வச் சந்தனம் திளைத்த மார்பன் - தனது பொதியமலைக்கண் செழித்து வளர்ந்த கடவுட்டன்மையுடைய சாந்தம் திமிர்ந்த மார்பையுடையனாய், மின்மலர் ஆரந்தாங்கி - மின்னல் விரிக்கும் முத்துமாலையைத் தாங்கியவனாய், வியன்நகர் விரும்பப் புக்கான் - அகன்ற போதனமாநகர் விரும்பி வரவேற்கும்படி புகுந்தான், (எ - று.) சங்கம் கண்டு செந்தமிழ் வளர்த்துப் புலவர் பாடும் புகழுடையனாகலின் “சொன்மலர்ந்து உலகம் ஏத்தும் சுடரவன் மருகன்“ என்றார். பொதியிலும் சந்தனப் பொழிலுமுடைமை தோன்றத் தென்மலைச் சந்தனந் திளைத்த மார்பன் என்றார். இந்திரனாலிடப்பட்ட ஆரத்தைத் தாங்கிய பெருமை தோன்ற, ஆரந்தாங்கி என்றார். பாண்டியனை ஏனைய எல்லா அரசரும் பாராட்டுதல் தோன்ற வியனகர் விரும்பப் புக்கான் என்றார். மதுரை மாநகர் அரசியல் அறநெறி தவிராத மாண்புடைய தென்பார் தோலா மன்மலர்ந்திலங்கு செய்கை என்றார். முத்தமிழும் முத்தும் ஆரமுந் தந் தேறலின் வளங்கெழு மதுரை என்றார். தெய்வத் தமிழொடு தொடர் புடைமையிற் றெய்வச் சந்தனம் என்றார். இவ்வாற்றாற் றேவர் தமக்குப் பாண்டி நாட்டின்கண் இருந்த மதிப்பினை நன்கு விளக்கினார் என்க. |
(659) |
மன்னர்கள் மன்றமேறி விளங்குதல் |
1790. | ஐம்பெருங் குலத்த ராய 3வரசரும் பிறரு மாங்கண் கம்பெறி 4களிநல் யானைக் கடற்படை புறத்த தாக |
|
|
(பாடம்) 1 சொன்மலர்த். 2 றோளான். 3 வரசர்கள். 4களிஞல். |