பக்கம் : 1106
 
  வம்பெறி வளாகஞ் செம்பொன் மஞ்சங்கண் மலிர வேறி
வெம்பறி விளங்குந் தானை வேலவர் விளங்கு கின்றார்.
 
     (இ - ள்.) ஐம்பெருங் குலத்தராய அரசரும் - இக்குவாகு குலம் முதலிய ஐந்து
பெருங்குலங்களுட் டோன்றியவராய அரசரும், பிறரும் - அவ்வரச ரல்லாத ஏனையோரும்,.
கம்பு ஏறி களி நல் யானை கடற்படை புறத்ததாக - கட்டுந் தூணை முறிக்கும்
மதக்களிப்புடைய நல்ல யானை முதலிய நால்வகைப்பட்ட கடல் போன்ற தத்தம் படைகளை
நகர்ப்புறத்தே வைத்து, வம்பு எறி வளாகம் செம்பொன் மஞ்சங்கள் மலிரவேறி -
மணங்கமழும் வட்ட வடிவினவாய ஆதனங்கள் திகழும்படி வீற்றிருந்து, வெம்பரி விளங்கும்
தானை வேலவர் - வெவ்விய புரவிகளால் விளக்கமுறுகின்ற படையையுடைய
அவ்வேந்தர்கள், விளங்குகின்றார் - திகழ்ந்தனர், (எ - று.)

     ஐம்பெருங்குலமாவன : - இக்குவாகுமரபு, அரிமரபு, நாதமரபு, குருமரபு, உக்கிரமரபு,
என்பன.

     இவ்வாறு ஐம்பெருங்குலத்து வேந்தரும் பிறவேந்தரும் படைபுறத்தவாக, மஞ்சங்கள்
மலிர ஏறி விளங்குகின்றார் என்க.

(660)

 

அமிததேசன் வருகை

1791. திருந்திய திலதக் கண்ணித் தேவிளங் குமரன் போலும்
அருந்தகை யரச நம்பி யடுதிற 1லமித தேசன்
பரந்தபின் பசலை கூரப் பனிக்கதிர் வருவ தேபோல்
விரிந்தொளி சுடர வேந்தர் விளங்கொளி மழுங்கச் சென்றான்.
 
     (இ - ள்.) திருந்திய திலதம் கண்ணி - திருத்திப் புனையப்பட்ட உயரிய முடிமலர்
மாலையையுடைய, தேவிளங் குமரன் போலும் - கடவுளாகிய முருகனைப் போன்ற,
அருந்தகை அரச நம்பி - அரிய தகுதியையுடைய அரசனாகிய, அடுதிறல் அமிததேசன் -
வெல்லும் ஆற்றல்மிக்க அமிததேசன் என்பான், பரந்த பனி பசலைகூர - பரவிய
பனிப்படலம் நிறங்குன்றும்படி, பின்கதிர் வருவதே போல் - அதன் பின்னர்த் தாய் ஞாயிறு
தோன்றினாற்போல, விரிந்து ஒளிசுடர - ஒளிபரவித் திகழவும், வேந்தர் விளங்கு ஒளி
மழுங்கச் சென்றான் - மன்னர்கள் விளங்குதற்குக் காரணமான தம்மொளி மழுங்குமாறும்
செல்லலானான், (எ - று.)

     கடவுளாகிய முருகனை ஒத்த அரச நம்பி அமிததேசன் பனிப்படலம் பசலைபாய
ஞாயிறு தோன்றினாற் போலே, தன் ஒளிசுடர வேந்தர் ஒளி மழுங்கச் சென்றான் என்க.

(661)

 

     (பாடம்) 1 லமுத.