பக்கம் : 1107 | | | 1792. | மழைபுரை மதத்த தாய மழகளி யானை தன்மேல் வழைவளர் சோலை சேர்ந்த மணிவண்டு மறிவ வேபோல் எழுதெழி லழகன் றன்மே லிளையவர் கருங்கண் வீழ்ந்து 1விழவயர் நகரின் வந்த வேந்தரை விட்ட வன்றே. | (இ -ள்.) வழைவளர் சோலை சேர்ந்த - சுரபுன்னை மரங்கள் செழித்து வளர்ந்துள்ள பொழிலினிடத்தே சேர்ந்த, மணிவண்டு - நீலமணி போன்ற வண்டுகள் அதனை ஒழித்து, மழைபுரை மதத்த தாய மழ களி யானை தன்மேல் மறிவவே போல் - மழைபோன்று மிக்குப் பொழியும் மதநீரையுடைய இளைமைத்தாகிய மதக்களிப்புடைய யானையின்பால் மீண்டு வந்து மொய்த்தனவற்றை ஒப்ப, இளையவர் கருங்கண் - இள மகளிருடைய கரிய கண்கள், விழவயர் நகரின் வந்த வேந்தரை விட்ட - சுயம்வர விழா நிகழ்கின்ற மண்டபத்தே வந்த அரசர் கண்மேல் வீழ்வதைவிட் டொழிந்தனவாய், எழுது எழில் அழகன் றன்மேல் வீழ்ந்த - ஓவியத்தே வரைதற்குரிய மிக்க அழகினையுடைய அமிததேசன் மேல் வீழ்ந்தன, அன்றே ; அசை, (எ - று.) ஏனைய வேந்தர் அழகு சோலைமலர் தரும் தேன்போன்று சிறுமையுடைத்தாய் ஒழிய அமிததேசன் அழகு யானை மதம்போன்று மிக்குப் பொழிதலின் மகளிர் கண் அவற்றை விட்டு இதன்பால் வீழ்ந்தன என்க. | (662) | | நம்பி, | 1793. | சோதிமாலையை அழைமின் எனல் வரைசெறிந் தனைய செம்பொன் மஞ்சங்கண் மலிரத் தோன்றி அரைசர்க ளிருந்த போழ்தி னாழியந் தடக்கை வேந்தன் விரைசெறி குழலங் கூந்தன் மெல்லியல் வருக வென்றான் முரைசொலி கலந்த சங்கு வயிரொடு முரன்ற வன்றே. | (இ - ள்.) வரை செறிந்தனைய - மலைகள் நெருங்கினாற் போன்ற, செம்பொன் மஞ்சங்கள் - செவ்விய பொன்னாலியன்ற இருக்கைகள், மலிரத் தோன்றி - விளங்கும்படி அவற்றின்கண் ஏறி, அரைசர்கள் - மன்னர்கள், இருந்த போழ்தில் - இராநின்ற அமயத்தே, ஆழியம் தடக்கை வேந்தன் - ஆழியையுடைய பெரிய கையயையுடைய மன்னனாகிய திவிட்டன், விரை | |
| (பாடம்) 1 விழையவர். | | |
|
|