பக்கம் : 1108
 

     செறி குழல் அங்கூந்தல் மெல்லியல் வருக என்றான் - மணம் நிறைந்த குழன்ற
அழகிய கூந்தலையுடைய மெல்லியல்புடைய சோதிமாலை இம்மண்டபத்திற்கு வரக்கடவள்
என்று பணித்தானாக, முரைசொலி சங்குவயிரொடு கலந்து முரன்ற - அப்பொழுது முரச
முழக்கமும் சங்கு கொம்பு இவற்றின் முழக்கமும் விரவி முழங்கின, அன்றே: அசை,
(எ - று.)

     மஞ்சங்கள் திகழுமாறு மன்னர்கள் ஏறி இருந்தபொழுதில் திவிட்ட நம்பி மெல்லியல்
வருக என்றானாக; அவ்வழி முரச முதலியன முழங்கின என்க.

(663)

 

வேறு

சோதிமாலை சுயம்வர மண்டபம் எய்துதல்

1794. மன்னவன் மடந்தைமணி மாடநிலை யுள்ளால்
பொன்னமளி 1மேனளிய பொங்கணையின் மேலாட் (கு)
கன்னமனை யாரடிக ளாரருளி தென்றார்
இன்னகைய பூந்தவிசி னின்றினி திழிந்தாள்.
 
     (இ - ள்.) மன்னவன் மடந்தை - திவிட்ட மன்னனின் மகளாகிய, மாடநிலை யுள்ளால்
- மேனிலைமாடத்தின் அகத்தே, பொன் அமளிமேல் - பொன்னாலியன்ற கட்டிலின்மேல்,
நளிய பொங்கு அணையின் மேலாட்கு - மலர்செறிந்துயர்ந்த பூவணையின் மேல்
வீற்றிருந்த சோதிமாலைக்கு, அன்னம் அனையார் - அன்னப் பறவை போன்ற உழைக்கல
மகளிர்கள், இது அடிகளார் அருள் என்றார் - இப்பணி திவிட்டமன்னருடைய அருள்
என்று கூறினராக, இன் நகைய பூந்தவிசினின்று இனிதின் இழிந்தாள் - அதுகேட்ட
சோதிமாலை இனிதின் விளங்குகின்ற மலரணையினின்றும் மெல்ல இறங்கினாள், (எ - று.)

     இது என்றது நம்பி “மெல்லியல் வருகÓ என்றதனை, மேன் மாடத்தே பொன்
அமளிமேல் பொங்கணையில் இனிதிருந்த சோதி மாலைக்கு, அன்னமனையார், இஃது
அடிகள் அருள் என்றார், அவளும் பூந்தவிசினின்றும் இனிதின் இழிந்தான் என்க.

 (664)

 

இதுவுமது

1795. வஞ்சியனை யார்மணி தொடர்ந்தசுடர் ஞாணால்
அஞ்சிலவி ருங்குழ லசைத்தயில் பிடித்தார்
கஞ்சுக முகத்தமுலை 2கச்சுமிக வீக்கி
மஞ்சிவரு 3மாமயி லனார்மருங்கு சூழ்ந்தார்.
 

     (பாடம்) 1 மேலடுத்த. 2 கச்சுமுகம். 2 மாமயிலி