எனவே அவன் பெயர் சுவலனசடி என்றாராயிற்று. அவனுடைய பெருமை எடுத்துக் கூறுவதற்கு அருமையானது என்பதாம். “இப்பால் விஜயார்த்த பர்வத தக்ஷிணறோணியில் ரதநூபுர சக்கரவாள நகரத்து நமிஸந்தாநத்து வித்யாதர ராஜா, ஜ்வலநஜடி மஹாராஜன்“ என்பது ஸ்ரீபுராணம். சுவலன - என்னுஞ்சொல்லை அழற்பெயர் எனத் தமிழில் மொழிபெயர்த்தார். |