பக்கம் : 1110 | | இதுவுமது | 1797. | வண்டுவழி செல்லவய மன்னர்மதி செல்லக் கண்டவர்கள் கண்கள்களி கொண்டருகு செல்ல எண்டிசையு 1மேத்தொலியொ டின்னொலிகள் செல்ல விண்டமல ரல்லிமிசை மெல்லநனி சென்றாள். | (இ - ள்.) வண்டு வழிசெல்ல - சோதிமாலை செல்லும் வழியிலே வண்டுகள் தொடர்ந்து செல்லவும், மன்னர் மதி செல்ல - அரசர்கள் நெஞ்சங்கள் தொடர்ந்து செல்லவும், கண்டவர்கள் கண்கள் களிகொண்டு அருகு செல்ல - பார்த்தவர்களின் கண்கள் மகிழ்ச்சிமிக்குப் பக்கத்தே செல்லவும், எண்டிசையும் - எட்டுத் திக்குகளினும், ஏத்தொலியோடு இன்னொலிகள் செல்ல - வாழ்த்தெடுக்கும் ஓசையோடே இசைக் கருவிகளின் இனிய ஓசைகள் செல்லவும், விண்டமலர் அல்லிமிசை - மலர்ந்த மலர்களின் அக இதழ்களின் மேலே, மெல்ல - பைப்பய, நனி சென்றாள் - மிகவும் நடப்பாளாயினள், (எ - று.) சோதிமாலை, தன் பின்னே வண்டுகளும் மன்னருடைய மனங்களும் கண்டவர் கண்களும் வரவும் ஏத்தொலியும் இன்னிய ஒலியும் முன்னே செல்லவும் மலரின் அகவிதழ் மேலே மிதித்து மெல்ல இயங்குவாளாயினள் என்க. வண்டுகள் அவளின் உறுப்புகளை மலரென எண்ணித் தேனுண்ணக் கருதித் தொடர்ந்தன, மன்னர்மனங்கள் காமவேட்கையாலே தொடர்ந்தன; கண்டவர் கண்கள் அழகுணர்ச்சியானே தொடர்ந்தன என்க. | (667) | | இதுவுமது | 1798. | அம்மெலடி தாமரைச ராவியொடு நோவச் 2செம்மெலிதழ் 3வாயொடவர் சிந்தனைது டிப்ப வெம்முலைக ளோடவர்கள் காதன்மிக வீங்க மைம்மலர் நிகர்க்குமணி மாளிகைய டைந்தாள். | (இ - ள்.) அம் மெலடி தாம் அரைசர் ஆவியொடு நோவ - சோதிமாலை தன் அழகிய மெல்லடிகள் அடியிடுந்தோறும் மன்னர்களுடைய உயிருடனே நோகாநிற்பவும், செம்மெலிதழ் வாய் அவர் சிந்தனையொடு துடிப்ப - தனது செவ்விய மென்மைமிக்க இதழ்களோடு கூடிய வாய் அம்மன்னர்களுடைய எண்ணங்களோடே துடியாநிற்பவும், வெம்முலைகள் | |
| (பாடம்) 1 மொத்தொலி. 2 செம்மலிதழ். 3 வாயொடலர் | | |
|
|