பக்கம் : 1111 | | அவர்கள் காதலொடு மிக வீங்க - தனது விரும்புதற்குக் காரணமான முலைகள் அம்மன்னருடைய காதலோடு விம்மாநிற்பவும், மைமலர் நிகர்க்கும் மணி மாளிகை அடைந்தாள் - கரிய மலரைப்போன்ற நீலமணி பதிக்கப்பட்ட சுயம்வர மண்டபத்தை எய்தினாள், (எ - று.) அவளடியின் மென்மை கண்டு அடியிடுந்தோறும் அவை நோகுங்கொல் என்று அரசர்மனம் உடன் நொந்தன என்க.செவ்விதழ் துடிக்குந்தோறும் அவைதரும் இன்பத்தை எண்ணி மன்னர் சிந்தை துடித்த என்க. முலைகள் சோதிமாலையின் நாண மிகுந்தோறும் விம்ம மன்னர்மனங்கள் ஆசையாலே விம்மின என்க. இவ்வாறு நோகவும் துடிக்கவும் விம்மவும் சோதிமாலை சுயம்வரமண்டபம் எய்தினள் என்க. | (668) | | இதுவுமது | வேறு | 1799. | 1பொன்னேநன் மணிக்கொம்பே பூமிமே லாரணங்கே போற்றி போற்றி 2அன்னேயெம் மரசர்குலத் தவிர்விளக்கே யாரமிர்தே போற்றி யுன்றன் 3மின்னேர்நுண் ணிடைநோமான் மென்மலர்மேன் மென்மெலவே யொதுங்கா யென்று 4மன்னேர்செ யயினெடுங்கண் மங்கைமார் போற்றிசைப்ப மாடம் புக்காள். | (இ - ள்.) பொன்னே - திருமகளே, மணிப்பூங்கொம்பே - அழகிய பூங்கொடிபோல்வாளே, பூமிமேல் ஆர் அணங்கே - இம்மண்ணுலகத்தே வதிகின்ற தெய்வமகளே, போற்றி போற்றி! - எம்மைப் புரந்தருள்க!, அன்னே - தாயே, எம் மரசர் குலத்து அவிர்விளக்கே - எங்கள் மன்னர் குலத்தின்கண் ஒளிரும் விளக்கே, ஆர் அமிர்தே - பெறலரும் அமிழ்தமே, போற்றி - எம்மைப் புரந்தருள்க, உன்றன் மின்நேர் நுண்ணிடை நோம் ஆல் - உன்னுடைய மின்னல் போன்ற மெல்லிய இடைவருந்தும் ஆதலால், மென்மலர்மேல் மென்மெலவே ஒதுங்காய் - மெல்லிய இம்மலர் மேலே பையப்பையவே செல்லுக, என்று - என்று கூறி மன் ஏர் செய் அயில் நெடுங்கண் மங்கைமார் - நிலைபெற்ற அழகையுடைய வேல்போலும் நெடிய கண்களையுடைய மகளிர்கள், போற்றிசைப்ப மாடம்புக்காள் - வாழ்த்தெடுப்பச் சுயம்வர மண்டபத்திலே சோதிமாலை புகுந்தாள், (எ - று.) | |
| (பாடம்) 1 பொன்னே மணிக். 2 அன்னே அரசர்குல விளக்கே. 3 மின்னேரிடை நோமான். 4 மன்னே ரயினெடுங்கண். | | |
|
|