பக்கம் : 1113 | | சோதிமாலைக்குத் தோழி அரசரைச் சுட்டிக்காட்டி வரலாறியம்பல் | 1801. | வடியரத்த மிடைவழித்துக் கருங்கண்ணுஞ் செம்பொன்னால் வளைத்த சூரல் கொடியரத்த மெல்விரலாற் கொண்டரசர் குலவரவு கொழிக்கு நீராள், முடியரக்குப் பூங்கண்ணி மூரித்தேர் 1வேந்தர்தமை முறையாக் காட்டிப் படியரக்கும் 2பாவைக்குப் பைபையவே 3யினையமொழி பகரா நின்றாள். | (இ - ள்.) வடி அரத்தம் இடைவழித்து - உருகிவடியும் செவ்வரக்கினால் மேற்புறம் வழிக்கப்பட்டு, கருங்கண்ணும் செம்பொன்னால் வளைத்த - கரிய கணுக்கள் தோறும் செவ்விய பொற்பூண் செறிக்கப்பட்ட, சூரல் கொடி - பிரம்பினை, அரத்த மெல்விரலால் கொண்டு - சிவந்த மெல்லிய தன் விரல்களாலே பற்றிக்கொண்டு, அரசர் குலவரவு கொழிக்கும் நீராள் - மன்னர் மரபின் வரலாற்றினை நன்கு ஆராய்ந்தறிந்த தன்மையுடைய தோழி ஒருத்தி, அரக்குப் பூங்கண்ணி முடிமூரித்தேர் வேந்தர் தமை - செம்மலர் தொடுத்த மலர்மாலை வேய்ந்த முடிக்கலனையும் பெரிய தேரையும் உடைய வேந்தர்களை, முறையாக் காட்டி - காட்டும் முறையானே காட்டி, படி அரக்கும் பாவைக்கு - நிலத்திலே இயங்கும் பாவைபோன்ற சோதிமாலைக்கு, பைபையவே - மெல்ல மெல்ல, இனையமொழி பகராநின்றாள் - இன்னோரன்ன மொழிகளையும் இயம்புவாளாயினாள், (எ - று.) அரக்குதல் - இயங்குதல். பாவை - கொல்லிப்பாவையுமாம். சூரல் - பிரம்பு. அரக்கு வழித்துக் கணுக்கடோறும் செம்பொன் பூணிட்ட பிரம்பினை விரலாலே பற்றினாள் ஒரு தோழி. பாவைக்கு வேந்தர்தமை முறையாகக் காட்டுபவள் இவ்வாறு கூறினாள் என்க. குலவரவு கொழிக்கும் நீராள் என்றார், மன்னர் குல வரலாற்றை நன்கு ஆராய்ந்தவள் என்பது தேன்ற. கொழித்தல் - ஆராய்தல். | (671) | | இவன் இக்குவாகுலத்து இளங்கோ எனல் | 1802. | அங்கார வலர்கதிர மணிசுடரு மரியணைமே லமர்ந்து தோன்றித் 4தங்கார மணிநிழற்றுந் 5தடவரையா ரகலத்தான் றகர நாறும் | |
| (பாடம்) 1 வேந்தரை. 2 பாவைக்குப் பையவே. 3 யினையன. 4துங்கார. 5 தடவரை யகலத்தன்றகர. | | |
|
|