பக்கம் : 1114
 
  கொங்கார வார்குழலார் குவிமுலைகண்
     முகம்பொருத குவவுத் தோளான்
இங்காரு நிகரில்லா விக்குவா
     குலத்திறைவ னிருந்த கோவே.
 
     (இ - ள்.) ஆங்கு அலர் கதிர ஆரமணி சுடரும் - அவ்விடத்தே விரிந்த ஒளியுடைய
முத்துமாலை ஒளிவீசாநின்ற, அரியணைமேல் அமர்ந்து தோன்றி - சிம்மாசனத்தின் மேலே
வீற்றிருந்து விளங்கி, நிழற்றும் மணி ஆரம் தங்கு தடவரை ஆர் அகலத்தான் -
மிளிருகின்ற மணிவடம் கிடந்த பெரிய மலை போலும் மார்பையுடையவனும், தகரம் நாறும்
வார்குழலார் - மயிர்ச்சாந்து கமழும் நீண்ட அளகத்தையுடைய மகளிர்களின், கொங்கு ஆர
குவி முலை கண்முகம் பொருத - மணமுடைய சந்தனந் திமிர்ந்த குவிந்த முலைகளின்
கண்ணையுடைய குவடுகள் உழுத, குவவுத்தோளான் - திரண்ட தோள்களையுடையனுமாய்,
இருந்த கோ - இருக்கின்ற வேந்தன், இங்கு யாரும் நிகர் இல்லா இக்குவா குலத்து
இறைவன் - இவ்விடத்தே யாரும் தனக்கு ஒப்பாரிலாத இக்குவாகு மரபிற்றோன்றி
மன்னன்காண்! (எ - று.)

     அங்கு அரியணைமேல் அமர்ந்து தோன்றி நிழற்றுந் தடவரை அகலத்தான், நிகரில்லா
இக்குவா குலத்திறைவன் கோ என்றாள் என்க.

(672)

 

இதுவுமது

1803. ஆதியா னருளாழி தாங்கினா
     னாயிரச்செங் கதிரோ 1னாணும்
சோதியான் சுரர்வணங்கு திருவடியான்
     சுடுநீறா நினையப் பட்ட,
காதியா னரு 2ளியபொற் கதிர் 3கொண்முடி
     கவித்தாண்டார் மருகன் கண்டாய்
ஓதியான் மொழி 4யினிவ னுறுவலிக்கு
     நிகராவா ருளரோ வேந்தர்.
 
     (இ - ள்.) ஆதியான் - ஆதிபகவனும், அருள் ஆழி தாங்கினான் - தருமசக்கரத்தைத்
தாங்கியவனும், ஆயிரச் செங்கதிரோன் நாணும் - ஆயிரம் சிவந்த கதிரோடு கூடிய
ஞாயிறும் நாணுதற்குக் காரணமான, சோதியான் - ஒளிவடிவமுடையவனும், சுரர்வணங்கு
திருவடியான் - தேவர்களாலே வணங்கப்பட்ட திருவடிகளை யுடையவனும், நினைய
சுடுநீறாப்பட்ட -
 

     (பாடம்) 1 னாணும். 2 னருளிய கதிர்முடி. 3 மொழியினவ.் 4 வுறுவலிக்கு