பக்கம் : 1115 | | நினைத்த மாத்திரையானே சுடப்பட்ட நீறுபோலே அழிந்த, காதியான் - காதிகன் மங்களையுடையவனுமாகிய விருஷப தீர்த்தங்கரரால், அருளிய பொற்கதிர்கொள் முடிகவித்து - அருளப்பட்ட பொன்னாலியன்ற சுடர்முடி சூட்டிக்கொண்டு, ஆண்டார் மருகன் கண்டாய் - இவ்வுலகத்தை ஆண்ட சிறந்த மன்னர்களின் மரபில் தோன்றியவன், ஓதியான் மொழியின் - இவன் பெருமையை யான் எடுத்துக் கூறுமிடத்து, இவன் உறுவலிக்கு - இவனுடைய பேராற்றலுக்கு, வேந்தர் நிகர் ஆவார் உளரோ - வேந்தர்களுக்குள் ஒப்பான வலியுடையார் உளரேயோ (இல்லை என்றபடி) (எ - று.) பட்ட காதியான் என்பதை அருங்கேடன் என்பதுபோலக்கொள்க. காதி கன்மங்கள் என்பன: உயிரின் இயற்கைப் பண்பினை மறைக்கும் கன்மங்களாம். அவை ஞானாவரணீயம், தரிசனாவரணீயம், மோகநீயம் அந்தராயம் என நான்காம். இக்குவாகு மரபினனாகிய, பரதசக்கரவர்த்தி, விருஷப தீர்த்தங்கரருடைய திருமகன் ஆதலின், “பட்டகாதியான் அருளிய பொற் கதிர்முடிÓ யென்றார், | (673) | | இதுவுமது | 1804 | ஆழித்தே ரொன்றேறி யலைகடலி னடுவோட்டி 1யமரார் தந்த மாழைத்தேர் மருங்கறா மணிமுடியு 2மணிகலமுந் திறையா வவ்வி, ஊழித்தே ரரசிறைஞ்ச வுலகெலா மொருகுடைக்கீ ழுறங்கக் காத்த, பாழித்தோட் பரதன்பி 3னிவனிவனா னிலமடந்தை பரிவு தீர்ந்தாள். | (இ - ள்.) ஆழித்தேர் ஒன்று ஏறி - உருள்களையுடைய ஒப்பற்ற தேரில் ஏறி, அலைகடலின் நடு ஒட்டி - அலையையுடைய கடலின் நடுவே அதனைச் செலுத்தி, மாழைத்தேர் - பொன்னாலியன்ற தேர்களையும், மணிமுடியும் - மணிகளாலியன்ற முடியணிகலன்களையும், அணிகலமும் -பிற அணிகலன்களையும், மருங்கு அறா - தன் பக்கத்தே ஒழியாதே, தேர் அரசு ஊழி இறைஞ்ச - தேரையுடைய பகை மன்னர்கள் முறையே வணங்கா நிற்ப, திறையா வவ்வி - அவற்றை இறைப் பொருளாகக் கவர்ந்து உலகெலாம் - | |
| (பாடம்) 1 யமரர். 2 மணிக்கலமு. 3 னிவனாலிந் நில மடந்தை. | | |
|
|