பக்கம் : 1117 | | இவன் பெருமை உலகறிந்ததாகலின் கூறவேண்டா என்றாள், என்க. மன்னவன்றன் மடமகளே! இன்னவனை இனி யான் கூறவேண்டா, இவன் இடமருங்கே மஞ்சஞ் சேர்ந்து பொலிந்து தோன்றும் வேற் குமரன், குருகுலத்தார்கோன் கூறக் கேளாய் என்றாள் என்க. | (675) | | இதுவுமது | 1806. | அருளாழி யறவரச னருளினா லகன்ஞாலம் பரிவு தீர்த்தான், உருளாழி யுடையரிவ னடைவின்மிகக் கடைப்பணிகொண் டுழையோர் போல இருளாழி நிழற்றுளும்பு 1மெரிபொன்மணி நெடுமுடிசாய்த் திறைஞ்சப் பட்டான், மருளாழுங் கழிவனப்பின் மற் 2றிவனே குலமுதற்கண் வயவோன் கண்டாய். | (இ - ள்.) அருள் ஆழி அற அரசன் அருளினால் - அருட்கடலாகியவனும் அறம் உரைத்த வேந்தனும் ஆகிய அருகக் கடவுளின் அருள் வழி நின்று, அகல் ஞாலம் பரிவு தீர்த்தான் - விரிந்த வுலகத்தின் இன்னல்களை அகற்றியவன், உருள் ஆழியுடையவர் - ஆணை உருளையையுடைய அரசர்கள், இவன் அடைவின் - இம்மன்னவனை அடைதல் செய்யுங்கால், மிகக் கடைப்பணி கொண்டு - மிக்க எளிய பணிகளையும் இவன் ஏவின் ஏற்றுக் கொண்டு, உழையோர் போல - இவன் ஏவலரைப்போன்று, இருள் ஆழி நிழல் துளும்பும் - இருண்ட நிலவட்டத்தே ஒளியைப் பரப்புகின்ற, எரிபொன்மணி நெடுமுடி சாய்த்து - சுடருடைய பொன்னாலியன்ற தம் மணியையுடைய நெடிய முடியைத் தாழ்த்தி, இறைஞ்சப்பட்டான் - வணங்கப்பெற்றவன், மற்றிவனே குலமுதற்கண் வயவோன் - இவனே உயர்குலத்தின் முதல்வர்களிலே சிறந்த ஆற்றலுடையான், கண்டாய்: முன்னிலையசை, (எ - று.) அடைவு - அடைதல். குருகுல மன்னனாகிய இவன், அறவாழியந்தணன் அருளிய அறநெறி பிறழாது நின்று ஞாலம் பரிவு தீர்த்தான்; உருளாழிமன்னர் இவன் உழையோர்போல நெடுமுடி சாய்த்திறைஞ்சப்பட்டான். இவன் குலமுதற்கண் வயவோன், என்றாள் என்க. | (676) | |
| (பாடம்) 1 மெரிமணி. 2 மற்றிவன். | | |
|
|