பக்கம் : 1119
 
  குங்குமஞ்சேர் கொழும்பொடியிற் புரண்டுதன்னி
     னிறஞ்சிவந்த குளிர்முத் தாரம்
செங்கதிரோ னொளிபருகுஞ் 1செவ்வரைதே
     ரகலத்தான் றிறமுங் கேளாய்.
 
     இ - ள்.) இங்கு இவனது இடமருங்கின் - இவ்விடத்தே இம் மன்னனுடைய
இடப்பக்கத்தில், எழில் வயங்கு மணி மஞ்சம் இலங்கவேறி - அழகு திகழ்கின்ற
மாணிக்கக்கட்டில் விளங்கும்படி ஏறியிருந்த, சங்கு இவர் வெண்சாமரையும் - சங்கை ஒத்த
இயங்குதலையுடைய வெள்ளிய சாமரையும், தாழ் குழையும் - தூங்குகின்ற குண்டலங்களும்,
நீள்சுடரும் தயங்கி வீச - திருமேனியின் நீண்ட ஒளிகளும் திகழ்ந்து வீசா நிற்பவும்,
குங்குமம் சேர் கொழும் பொடியில் - குங்குமம் கலந்த கொழுவிய மணப்பொடியின்கண்,
புரண்டு தன் நிறம் சிவந்த - புரள்தலால் தன்னிறம் சிவப்பாக மாறிய, குளிர் முத்தாரம் -
குளிர்ந்த முத்துமாலை, செங்கதிரோன் ஒளி பருகும் - கதிரவனுடைய ஒளியை விழுங்கா
நின்ற, செவ்வரை நேர் அகலத்தான் - செம் பொன் மலையை ஒத்த மார்பினை
யுடையவனாகிய இம்மன்னவனுடைய, திறமும் கேளாய் - பெருமையையும் இனிக் கூறக்கேள்,
(எ - று.)

     இம்மன்னனின் இடமருங்கே, மஞ்சமிலங்க ஏறி, வீச, குளிர் முத்தாரம் கதிரோன் ஒளி
பருகும், அகலத்தான் திறமுங்கேள், என்றாள், என்க.

(678)

 

இதுவுமது

1809. தகரநா றிருஞ்சோலைச் சயம்பூறான்
     றுறவரசாய் நின்ற காலை
மகரயாழ் நரம்பியக்கி வரங்கொண்டு
     வடமலைமே லுலக மாண்ட
சிகரமா லியானையான் வழிமருகன்
     செந்தாமந் தவழ்ந்து தீந்தேன்
பகருமா மணிமுடியா 2னமரருமே
     பாராட்டும் படியன் பாவாய்.
 
     (இ - ள்.) தகரம் நாறு இருஞ்சோலை - தகரமலர் கமழும் பெரிய பொழிலின்
கண்ணே, சயம்பூல்தான் - சயம்பூலி என்பவர், துறவரசாய் நின்றகாலை - தவத்தாற் சிறந்து
துறவிகட்கு அரசாகத் திகழ்ந்த காலத்தே,
 

     (பாடம்) 1 செவ்வரை யகலத்தான். 2னமரரும்.