பக்கம் : 1120 | | மகரயாழ் நரம்பியக்கி - தனது இசை நூல் வன்மையால் மகரயாழினது நரம்பை வருடி இனிய இசைபாடி, வரங்கொண்டு - அம்முனிவனிடத்தே சிறந்த வரங்களைப் பெற்று, வடமலைமேல் உலகம் ஆண்ட - இமயமலை மேலிருந்து உலகத்தை ஆட்சி செய்த, சிகரமால் யானையான் - சிகரங்களை ஒத்த பெரிய யானைப்படையையுடைய மன்னனுடைய, வழிமருகன் - மரபின் வழிவந்தவன், தீம் செந்தாமம் தவழ்ந்து தேன் பகரும் மாமணி முடியான் - இனிய செவ்விய மலர் மாலைகளிலே ஊர்ந்து வண்டுகள் பாடுகின்ற சிறந்த மணிகள் பதித்த முடியுடைய இம்மன்னன், அமரருமே பாராட்டும் படியன் - தேவர்களும் புகழ்தற்குரிய உருவத்தையுடையவன் ஆவான், பாவாய் - சோதிமாலாய்!, (எ - று.) சயம்பூலி துறவரசாய் நின்ற காலை நரம்பியக்கி வரங்கொண்டு வடமலைமேலுலகம் ஆண்ட யானையானாகிய உக்கிரவேந்தனின் மரபினன் அமரருமே பாராட்டும் அழகன் இவன் என்றான் என்க. | (679) | | இதுவுமது | 1810. | சக்கரர்தாம் பிறந்துவரித் தரங்கநீர் வளாகமெல்லாந் தங்கீழ்க் கொண்ட உக்கிரமெய்க் குலத்தரச னொளிவேலிவ் 1விளையனவ துருவே கண்டாய் அக்கிரநற் பெருந்தேவி மடமகளே யரசணங்கு மணங்கே யின்னும் விக்கிரமக் கடற்றானை விறல்வேந்த ரிவர்சிலரை விளம்பக் கேளாய். | (இ - ள்.) சக்கரர் தாம் பிறந்து - சக்கரவர்த்திகள் பலர் தோன்றி, உவரித் தரங்க நீர் வளாகம் எல்லாம் - கடலினது அலையுடைய நீராற் சூழப்பட்ட நிலவட்டம் முழுவதையும், தம் கீழ்க் கொண்ட - தம்முடைய குடை நீழலிலே கொண்டு ஆண்ட, உக்கிர மெய்க்குலத்து அரசன் - உக்கிர குலம் என்னும் உயரிய குலத்திலே பிறந்த மன்னன், ஒளிவேல் இவ்விளையவனது - ஒளிமிக்க வேலையுடைய இவ்விள மன்னனுடைய, உருவே கண்டாய் -எழிலை நீயே காண்கின்றனை, அக்கிரநற் பெருந்தேவி மடமகளே - திவிட்டனுடைய முதன்மையான மனைவியாகிய சுயம்பிரபையின் செல்வியே, அரசு அணங்கும் அணங்கே - அரசர்களை வருத்தும் தெய்வமகளே, இன்னும் - மேலும், விக்கிரமக் கடல்தானை - வீரச்செயலையுடைய கடல் போலும் படைகளையுடைய, விறல்வேந்தர் இவர் சிலரை - வெற்றியையுடைய மன்னராகிய இவர்களிற் சிலர் பெருமையை, விளம்பக் கேளாய் - கூறக்கேள், (எ - று.) | |
| (பாடம்) 1 விளைய வனுருவேல். | | |
|
|