பக்கம் : 1121 | | சக்கரவர்த்திகள் பலர் தோன்றி உலகெலாம் தங்கீழ்க்கொண்ட உக்கிரநற்குலத்து அரசன் இவன்; இவனுரு நீயே காண்டி; மடமகளே விறல்வேந்தராகிய இவர் சிலரை விளம்புவல் கேள்! என்றாள் என்க. | (680) | | நாதமரபின் நம்பி சிறப்பு | 1811. | ஏலஞ்செய் பைங்கொடியி னிணர்ததைத்து பொன்னறைமேற் கொழுந்தீன் றேறிக் கோலஞ்சேர் வரைவேலிக் குண்டலத்தார் கோமானிக் கொலைவேற் காளை ஞாலங்க ளுடன்பரவு 1நாதவன்றன் குலவிளக்கு நகைவே னம்பி போலிங்க ணரசில்லை 2பொன்னார வரைமார்பன் பொலிவுங் காணாய். | (இ - ள்.) ஏலம் செய் - பஞ்சவாசங்களுள் ஒன்றாகிய ஏலம் செய்தற்குக் காரணமான, பைங்கொடியின் - ஆஞ்சியினது பசிய கொடி, இன் இணர்ததைந்து - இனிய பூங்கொத்துக்கள் செறியப்பெற்று, பொன்னறைமேல் - மலையினது அழகிய உச்சியின்மேல், கொழுந்து ஈன்று ஏறி - கொழுந்துவிட்டுப் படர்ந்து, கோலஞ்சேர் - அழகுறுத்தப்பட்ட, வரைவேலிக் குண்டலத்தார் - மலைகள் வேலிபோற் சூழப்பட்ட குண்டல புரத்தாருடைய, கோமான் இக்கொலை வேல் காளை - மன்னனாவான் இந்தக் கொலைத்தொழில் வல்ல வேலேந்திய காளை போல்வான், ஞாலங்கள் உடன் பரவும் - உலகமனைத்தும் ஒருங்கே புகழ்கின்ற, நாதவன்றன் குலவிளக்கு - நாதவகுலத்தை ஒளிரச்செய்யும் விளக்கை ஒப்பவன், நகைவேல் நம்பிபோல் இங்கண் அரசில்லை - இவ் விளங்கும் வேலுடைய நம்பியை ஒத்த அரசர்கள் இவ்விடத்தே ஒருவரேனும் இலர், பொன் ஆர வரை மார்பன் பொலிவும் காணாய் - பொன்மாலை பூண்ட மலைபோன்ற மார்பினையுடைய இம் மன்னனுடைய அழகையும் நீ காண்பாயாக, (எ - று.) இக் கொலை வேற் காளை நாதகுலத்துத் தோன்றிக் குண்டல நகரை ஆள்வோன்; நகைவேல் நம்பி இவன்போல் இங்கு அரசில்லை, பொன்னாரமார்பன் பொலிவும் நீ காண்டி என்றான் என்க. | (681) | |
| (பாடம்) 1 நாதன்றன் 2 பொன்னார். | | |
|
|