பக்கம் : 1122 | | அரிமரபரையன் சிறப்பு | 1812. | சொரிமலர்த்தண் மலரணிந்த சோலைசூழ் சூரியத்தார் கோமான் றோலா அரிகுலத்தார் போரேறிவ் வரியேறு போலிருந்த 1வரச காளை வரிமலர்த்து மணிவண்டு புடைவருடு மாலையார் மகளிர் வாட்கண் புரிமலர்த்தண் வரையகலம் புணராதார் புண்ணியங்கள் புணரா தாரே. | (இ - ள்.) சொரிமலர் தண் மலர் அணிந்த சோலைசூழ் - உதிர்தலையுடைய மலர்ந்த குளிர்ச்சி பொருந்திய மலரால் அழகுற்ற சோலைகளாற் சூழப்பட்ட, சூரியத்தார் கோமான் - சூரியபுரத்து மன்னனும், தோலா - தோற்றறியாத, அரிகுலத்தார் போர் ஏறு - அரிமரபிற்றோன்றிய போர்வல்ல சிங்கம், இவ்வரியேறு - இந்த ஆண்சிங்கம் போலிருந்த, அரச காளை - மன்னனுடைய, புரிமலர்த்தண் வரையகலம் - விரும்புதற்குக் காரணமான மலர் பொருந்திய குளிர்ந்த மலைபோன்ற மார்பிடத்தே, புணராதார் - புணரப்பெறாதவராகிய, மலர்த்தும் வரிமணி வண்டு - மலர்களை நெகிழ்த்து மலரச்செய்யும் வரியுடைய மணி போன்ற வண்டுகள், புடைவருடும் மாலையார் வாட்கண் மகளிர் பக்கத்தே கிண்டுதலையுடைய மலர்மாலையணிந்தவராகிய வாள்போலும் கண்களையுடைய மகளிர்கள், புண்ணியங்கள் புணராதார் - அறஞ்செய்து அதன் பயன் கைவரப் பெறாதவரேயாவர், (எ - று.) இவன் சூரியத்தார் கோமான், தோலா அரிகுலத்தார் போரேறு, அரச காளை, இவ் வரியேறு போலிருந்தான் வரையகலம் புணராதார் புண்ணியங்கள் புணராதார் என்றாள் என்க. | (682) | | பாண்டியன் பெருமை | 1813. | வேலைவாய்க் கருங்கடலுள் வெண்சங்கு மணிமுத்தும் விரவி 2யெங்கும் மாலைவாய்க் கரும்பறா 3வகன்பண்ணை தழீஇயருகே யருவி தூங்கும் | |
| (பாடம்) 1 வரசர் காண. 2யேங்கும். 3வகன்பணை. | | |
|
|