பக்கம் : 1123 | | | சோலைவாய் மலரணிந்த சூழ்குழலா ரியாழிசையாற் றுளைக்கை வேழம் மாலைவாய் நின்றுறங்கு 1மதுரைசூழ் வளநாடன் வடிவு காணாய். | (இ - ள்.) வேலைவாய் - கடற்கரையிடத்தே, கருங்கடலுள் வெண்சங்கும் மணிமுத்தும் விரவி - கரிய கடல்படுபொருளாகிய வெளிய சங்குகளும் முத்தமணிகளும் கலக்கப்பெற்று, எங்கும் - எவ்விடத்தேயும், மாலைவாய் கரும்பு அறா - வரிசையமைந்த கரும்புகள் அறாத, அகன் பண்ணை - அகலிய வயல்கள், தழீஇ - தழுவப்பெற்று, அருகே அருவிதூங்கும் - அவற்றின் அயலே மலையருவிகள் இடையறாது பாயும், சோலைவாய் - பொழில்களின் அகத்தே, மலர் அணிந்த சூழ் குழலார் - மலர் மாலையை அணிந்துள்ள செறிந்த கூந்தலையுடைய மகளிர்களின், யாழ் இசையால் - யாழினது இனிய இசையைச் செவியேற்றலாலே, மாலைவாய் - மாலைக்காலத்தே, துளைக்கைவேழம் - துளையுடைய துதிக்கை யானைகள், நின்று உறங்கும் - நின்ற படியே உறங்கா நிற்கும், மதுரைசூழ் வளநாடன் - மதுரைமா நகரத்தைச் சூழ்ந்துள்ள வளமிக்க பாண்டி நாடனுடைய, வடிவு - அழகை, காணாய் - நீயே கண்டுகொள்ளக் கடவாய் (எ - று.) வேலைவாய் - என்றது கடல்சார்ந்த நெய்தனிலத்தை என்க. கடல்படு பொருளாகிய சங்கும் முத்தும் விரவி, கரும்பறா அகன்பண்ணை தழுவி, யருகே அருவிதூங்கும் சோலைவாய் சூழ்குழலார் இசையால் மாலைவாய் வேழம்நின்று உறங்கும் மதுரையையும் அதனைச் சூழ்ந்த வளநாட்டையு முடைய இம்மன்னன் பாண்டியன்; அவன் வடிவும் காண்க என்றாள் என்க. இச்செய்யுளின்கண் நானிலவளனும் கூறினமை ஆராய்ந்து காண்க. | (683) | | இதுவுமது | 1814. | 2கண்சுடர்கள் விடவனன்று கார்மேக மெனவதிருங் 3களிநல் யானை விண்சுடரு நெடுங்குடைக்கீழ் விறல்வேந்தன் றிறமிதனை விளம்பக் கேளாய் தண்சுடரோன் வழிமருகன் றென்மலைமேற் சந்தனமுஞ் செம்பொன் னாரத் தொண்சுடரும் 4விரவியநல் வரைமார்ப னுலகிற்கோர் திலதங் கண்டாய். | |
| (பாடம்) 1 மதுரைசூழ். 2கண்சுடர். 3 களிஞலி யானை. 4 விரவியவரை. | | |
|
|