(இ - ள்.) கண் சுடர்கள் விட - கண்கள் தீப்பொறி கால, அனன்று - சினந்து, கார்மேகம் என அதிரும் - கரிய முகிலைப் போன்று முழங்கும், களிநல் யானை - களிப்புடைய நல்லிலக்கணம் அமைந்த யானையின் பிடரின்மேல், விண் சுடரும் - விசும்பெங்கும் ஒளிபரப்பும், நெடுங்குடைக்கீழ் - நீண்ட குடையின் நீழலிலே இருந்து ஊர்தலுடைய, விறல் வேந்தன் - ஆற்றல் சான்ற பாண்டியனுடைய, திறமிதனை - பெருமையை, விளம்பக் கேளாய் - யான் கூறுவல் கேட்பாயாக, தண்சுடரோன் வழிமருகன் - இப்பாண்டிமன்னன் திங்கள்மரபிற் பிறந்தவன், தென் மலைமேல் சந்தனமும் - தனது பொதியிலிலே வளர்கின்ற சந்தனத்தின் குழம்பும், செம்பொன் ஆரமும் - இந்திரனால் இடப்பட்ட செவ்விய பொன் ஆரமும், விரவிய - கலந்த, நல்வரைமார்பன் - நல்ல மலைபோன்ற மார்பையுடையவன், உலகிற்கோர் திலதம் கண்டாய் - இப்பேருலத்திற்கே திலதமானவன்காண், (எ - று.) திலதம் - மேன்மை. ஆரம் - முத்தாரமுமாம். யானை விறல் வேந்தன் திறமிதனை விளம்பக்கேள்! தண்சுடரோன் வழிமருகன், தென்மலைமேற் சந்தனமும், ஆரத்து ஒண்சுடரும் விரவிய நல் மார்பன், உலகிற்கோர திலதம் காண் என்றாள், என்க. |
(இ - ள்.) மழைக்கு அரும்பும் கொடிமுல்லை - கார்ப்பருவத்தே அரும்புதலையுடைய முல்லைக்கொடி, மருங்கு ஏற - தம்பக்கத்தே படர, வரம்பு அணைந்து - கழனிகளின் வரம்பிலே சேர்ந்து, தடாவி - வளைந்து, நீண்ட - நீண்டு வளர்ந்த, கழைக்கரும்பு - கோலாகிய கரும்புகள், கண் ஈனும் - கணுக்களிலே முத்துக்களை ஈனாநிற்கும், காபுரத்தார் கோமான் இக்கதிர் வேல்காளை - காபுரத்தாருடைய அரசனாவான் இந்த ஒளி வேலேந்திய காளைபோன்ற மன்னன், இழைக்கு அரும்பும் இளமுலையாய் - |