பக்கம் : 1125 | | ஆடையினூடே முகிழ்த்த இளமையுடைய முலையையுடைய சோதிமாலாய், எரிகதிரோன் வழிமருகன் - சூரிய மரபில் பிறந்தவன், இவன் - இம்மன்னனுடைய, நீர் ஈர்ந்தண் தழைக் கரும்பின் முருகு உயிர்க்கும் தார் அகலம் - நீர்மையையுடைய ஈரம் பொருந்திய குளிர்ந்த தழைகள் மிக்க கரும்பெழுதப்பட்ட மணங்கமழ்கின்ற மலர்மாலையணிந்த மார்பிடத்தே, சார்ந்தவர்கள் தவம் செய்தாரே - பொருந்திய மகளிர்கள் பெரிய தவம் செய்தவரே ஆதல் வேண்டும், (எ - று.) கரும்பு - எழுதிய கரும்பு என்க. காபுரத்தார் கோமானாகிய இக்கதிர் வேற்காளை கதிரோன் வழி மருகன்; இவன் தாரகலம் சார்ந்தவர்கள் தவம் செய்தோரே, என்றாள் என்க. | (685) | | சோழமன்னன் பெருமை | 1816. | வண்டறையு மரவிந்த 1வனத்துலாய் மதர்த்தெழுந்த மழலை யன்ன முண்டுறைமுன் 2விளையாடி யிளையவர்க ணடைபயிலு முறந்தைக் கோமான், கொண்டறையு மிடிமுரசுங் கொடிமதிலுங் குளிர்புனலும் பொறியும் பூவும் ஒண்டுறையு மும்மூன்று முடையகோ வேயிவன தெழிலுங் காணாய். | (இ - ள்.) வண்டு அறையும் அரவிந்த வனத்து உலாய் - வண்டுகள் பாடாநின்ற தாமரைக் காட்டிலே திரிந்து, மதர்த்து எழுந்த மழலை அன்னம் - களித்து எழாநின்ற இளைய அன்னப் பறவைகள், உண் துறைமுன் விளையாடி - நீர் உண்ணுதற்குரிய துறைகளிலே விளையாட்டயர்ந்து, இளையவர்கள் நடை பயிலும் - இளமகளிரின் நடையைக் கற்றுக் கொள்ளுகின்ற உறந்தைக் கோமான் - உறந்தை என்னும் நகரத்து மன்னனாகிய சோழன், கொண்டு அறையும் இடி முரசும் - யானை மேற்கொண்டு முழக்குதலையுடைய இடிபோன்ற ஒலியுடைய முரசும், கொடி மதிலும் - கொடிகள் நடப்பட்ட மதிலும், குளிர் புனலும் - தட்பமிக்க நீர்நிலையும், பொறியும் - இலச்சினையும், பூவும் - அடையாள மலரும் ஆகிய, ஒண்டுறையும் - ஒள்ளிய கடற்றுறையும், மும்மூன்றும் உடைய கோவே - இவையிற்றுள் ஒவ்வொன்றிலும் தனித்தனி மூன்று மூன்று உடைய அரசனே ஆவான் இவன், இவனது எழிலும் காணாய் - இம்மனனுடைய அழகையும் கண்டருள்க, (எ - று.) | |
| (பாடம்) 1 வனத்துழாய். 2 விளையாடும். | | |
|
|