பக்கம் : 1129 | | மலிரத் தோன்றும் - வடக்குப் பகுதியில் மணிகளானியன்ற கட்டில்கள் திகழுமாறு வீறறிருந்து விளங்கும், விஞ்சையர்தம் உலகு ஆளும் விறல்வேந்தர் குழாங்காட்டி - விச்சாதரர் உலகத்தை ஆளுகின்ற வெற்றியையுடைய மன்னர்கள் கூட்டத்தையும் அவளுக்குக் காட்டி, விரித்துச் சொன்னாள் - அவர் வரலாற்றினையும் விரித்து விளம்பினாள், தோழி மெல்லிடையவளைச் சூழ்ந்து நடைபயிற்றிப் படைவேந்தர் பலரைக் காட்டி, மாளிகையின் வடமருங்கில் மஞ்சம் மலிரத் தோன்றும் விஞ்சையர்தம் விறல்வேந்தர் குழாங்காட்டி விரித்துச் சொன்னாள் என்க. | (690) | | இதுவுமது | 1821. | மாடிலங்கு மழைதவழ்ந்து மணியருவி பொன்னறைமேல் வரன்றி 1வன்பூந் தோடிலங்கு கற்பகமுஞ் சுரபுன்னை வனங்களுமே துதைந்து வெள்ளிக் கோடிலங்கு நெடுவரைமேற் குடைவேந் ரிவர்குணங்கள் கூறக் கேட்பின் ஏடிலங்கு பூங்கோதா யிமையவரின் வேறாய திமைப்பே கண்டாய். | (இ - ள்.) இலங்கும் மழை மாடு தவழ்ந்து - திகழ்கின்ற முகில்கள் பக்கங்களிலே தவழப்பட்டும், பொன்னறைமேல் அருவிமணி வரன்றி - உச்சியிடத்தே நீர் அருவிகளால் மணிகள் அரிக்கப்பட்டும், வண் பூந்தோடு இலங்கும் கற்பகமும் சுரபுன்னை வனங்களுமே துதைந்து - வளவிய மலர் இதழ்கள் மிளிர்கின்ற கற்பகமரங்களும் சுரபுன்னைக் காடுகளுமே அடரப்பட்டும், இலங்கும் வெள்ளிக்கோடு நெடுவரைமேல் - திகழ்கின்ற கொடுமுடிகளையுடைய நீண்ட வெள்ளிமலையின் மேலே, குடை வேந்தர் - குடை கவித்தாளுகின்ற மன்னர்களாகிய, இவர் குணங்கள் கூறக்கேட்பின் - இவருடைய பண்புகளைக் கூறுமாறு கேட்குமிடத்தே, ஏடிலங்கு பூங்கோதாய் - இதழ்கள் விளங்குகின்ற அழகிய மலர்மாலையை அணிந்த சோதிமாலாய், இமையவரின் வேறாயது இமைப்பே கண்டாய் - இவர், அமரர்களினின்றும் வேறாகக் காணப்படுதற்குக் காரணம், இவர்கள் கண்கள் இமைப்பதொன்றேயாம், (எ - று.) | |
| (பாடம்) 1 வம்பூந். | | |
|
|