பக்கம் : 1131 | | இதுவுமது | வேறு | 1823. | கடாமிகு களிநல் யானைக் கவுளிழி கான வீதி விடாமிகை சுழன்று வீழும் விரைகவர் மணிவண் டேபோல் படாமுகக் களிற்றி னான்றன் பவழக்குன் றனைய மார்பில் தடாமுகை யலங்க றன்மேற் றையல்கண் சரிந்த வன்றே. | (இ - ள்.) களிநல் யானை கவுளிழி மிகு கடாம் - மதக் களிப்புடைய நல்ல யானையினுடைய கவுளினின்றும் பொழிகின்ற மிக்க மதநீர் பொருந்திய, கான வீதி - மணமுடைய தெருவினை, விடா மிகை சுழன்று வீழும் - விடாதனவாய் மிகுதியாகச் சுற்றிச் சுற்றி வீழ்தலையுடைய, விரைகவர் மணிவண்டே போல் - அம்மத மணத்தினைக் கவருகின்ற நீலமணி போன்ற வண்டுகளைப் போன்று, படாமுகக் களிற்றினான்றன் - முகபடாமணிந்த அரசு வாவினையுடைய, அமிததேசனுடைய, பவழக்குன்று அனைய மார்பில் - பவழமலையை ஒத்த மார்பின்கண், தடாமுகை அலங்கல் தன்மேல் - தாழியிலிட்டு வளர்த்த குவளை மொட்டுக்களால் பிணையப்பட்ட மலர்மாலையின் மேலே, தையல் கண் சரிந்த அன்றே - சோதிமாலையின் கண்கள் வீழ்ந்தன, (எ - று.) தடா - தாழி. யானையின் மதநீர் மிக்குப் பொழிந்த வீதியை விடாது மொய்க்கும் வண்டுகளைப் போன்று சோதிமாலையின் கண்கள் பவளக் குன்றனையான் மார்பிலிட்ட மாலை மேலே வீழ்ந்தன என்க. சரிந்தன என்றார், தம்வய மிழந்து வீழ்தலை யுணர்த்த. | (693) | | இதுவுமது | 1824. | ஏட்டினார் குழலி னாளுக் குழையவ ளின்ன னென்று காட்டினா ளாவ தல்லாற் காரிகை தன்னின் முன்னம் ஓட்டினா ணிறையுங் கண்ணு முள்ளமுங் 1களித்த தங்கே பாட்டினா லென்னை போக பான்மையே 2பலித்த தன்றே. | (இ - ள்.) ஏட்டின் ஆர் குழலினாளுக்கு - இதழ்களாலே நிரப்பப்பட்ட அளகத்தையுடைய சோதிமாலைக்கு, உழையவள் - தோழி, இன்னன் என்று - இவ்வமிததேசன் இத்தகையன் என்று காட்டினாள் ஆவது அல்லால் - கூறிக்காட்டினாள் அத்துணையே யல்லது, காரிகை - சோதிமாலை, முன்னம் - அத்தோழி கூறிக்காட்டற்கு முன்னரே, தன்னின் - தன்னிடத்திருந்து, நிறையும் கண்ணும் ஓட்டினாள் - நிறையையும் கண்களையும் அவனிடத்தே செலுத்தினாள், உள்ளமும் அங்கே களித்தது - அவள் நெஞ்சமும் அவ்விடத்தே பெரிதும் மகிழ்ந்தது, பாட்டினால் என்னைபோக - ஒருவற்குத் தனது முயற்சி மாத்திரையானே யாதுண்டாம், அஃதொழிக, பான்மையே பலித்தது - ஊழின படியே பயனும் பொருந்திற்று, (எ - று.) | |
| (பாடம்) 1 கழித்த. 2 பழுதன்றே காண், பழுத்ததன்றே. | | |
|
|