பக்கம் : 1138 | | (இ - ள்.) சயமரம் அறைந்த நன்னாள் - சுயம்வரம் குறிக்கப்பட்டுக் கூறிய அந்த நல்ல நாளிலே, தமனிய மஞ்சம் பாவி - பொற்கட்டில்களைச் சுயம்வர மாளிகையிற் பரப்பி, இயமரம் துவைப்ப - இசைக் கருவிகள் முழங்கும்படி, இகல் மன்னர் ஏறி இருந்த போழ்தில் - போர் மன்னர்கள் அவற்றில் ஏறி வீற்றிருந்த அமயத்தே, பயமலை மன்னன் பாவைக்கு - பயன் மிக்க மலைக்கு மன்னனாகிய அருக்க கீர்த்தியின் மகளாகிய சுதாரைக்கு, கயமலர் நெடுங்கணாள் ஓர் காரிகை - குளத்தின் மலர்ந்த நீலோற்பல மலர் போன்ற நீண்ட கண்களையுடையாள் ஒரு தோழி, அவரவர் பண்பு கூறிக் காட்டினாள் - அவ்வவ்வரசர்களின் இயல்புகளை எடுத்து விளக்கிக் காட்டினாள், (எ - று.) சுயம்வரச் செய்தியை முரசறைந்து அறிவித்த நன்னாளிலே, மன்னர் பல்லிய முழங்க மஞ்சம் ஏறி இருந்தனராக; நெடுங்கணாள் ஒருத்தி அவர் வரலாறு கூறிச் சுதாரைக்குக் காட்டினாள் என்க. | (703) | | சுதாரை விசயனை விழைதல் | 1834. | வரிகழன் மன்ன ரென்னு மணிநெடுங் குன்ற மெல்லாம் சுரிகுழன் மடந்தை யென்னுந் 1தோகையம் மஞ்ஞை நோக்கி எரிகதி ராழி வேந்தன் றிருமக னென்னுஞ் செம்பொன் விரிகதிர் விலங்கற் றிண்டோட் குவட்டினை விரும்பிற் றன்றே. | (இ - ள்.) வரிகழல் மன்னர் என்னும் - வரிந்து கட்டிய வீரக்கழலுடைய அரசர்கள் என்று கூறப்படுகின்ற, மணி நெடுங்குன்றம் எல்லாம் - மணிகள் மிக்க நீண்ட மலைகளை எல்லாம், சுரிகுழல் மடந்தை என்னும் - சுருண்ட கூந்தலையுடைய சுதாரை என்று கூறப்படுகின்ற, தோகை அம்மஞ்ஞை நோக்கி - தோகையையுடைய அழகிய மயில் பார்த்துப் பார்த்து, எரிகதிர் ஆழிவேந்தன் - வீசும் ஒளியையுடைய ஆழிப்படை தரித்த திவிட்டனுடைய, திருமகன் என்னும் - செல்வ மிக்க மகன் என்று கூறப்படுகின்ற, செம்பொன் விரிகதிர் விளலங்கற் றிண்டோள் - செவ்விய பொன்னாலியன்ற அணிகலன்கள் ஒளி விரிக்கும் மலையினது திரண்ட திண்ணிய தோள்களாகிய, குவட்டினை - கொடுமுடியை, விரும்பிற்று அன்றே - நனி விழைவதாயிற்று, அன்றே : அசை, (எ - று.) | |
| (பாடம்) 1 தோகைய மஞ்ஞை. | | |
|
|