என்னும் நைடதம் முதலிய இடங்களிற் காண்க. ஈண்டுக் கூறப் பெறும் போலும் என்பது ஒப்பில் போலி. |
( 23 ) |
ஆடவர்மேல் வளைந்த வில் |
142. | மின்னு வார்ந்தமந் தாரவி ளங்கிணர் 1துன்னு தொன்முடி யானொளி சென்றநாள் மன்னு மாடவர் 2மேல்வளைந் திட்டன பொன்ன னார்புரு வச்சிலை போலுமே. |
(இ - ள்.) மின்னு ஆர்ந்த - மின்னொளி பொருந்திய; மந்தார - மந்தாரையின்; விளங்கு இணர் துன்னு தொன்முடியான் - விளங்குகின்ற பூங்கொத்துக்கள் பொருந்திய பழைமையான முடியையுடைய அரசன்; ஒளி சென்றநாள் - ஆணை நடந்த காலத்திலே; மன்னும் ஆடவர்மேல் வளைந் திட்டன - நிலைபெற்ற சீர்த்தியையுடைய இளைஞர்களின்மேல் வளைந் தவைகள்; பொன் அனார் புருவச்சிலை போலும் - அழகால் திருமகளை யொத்த மங்கையர்களின் புருவமாகிய விற்களேயாம், (எ - று.) சுவலனசடியின் ஆட்சிக்காலத்தில் அந்நாட்டில் விற்போர்யாண்டும் இல்லையென்பது இச்செய்யுளால் உணர்த்தப்பட்டது. ஒளி ஈண்டு ஆணை. “உறங்குமாயினு மன்னவன் தன்னொளி கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்“ என்றார் சீவக சிந்தாமணியினும் (248) போலும் என்பது ஈண்டும் ஒப்பில் போலியே. |
( 24 ) |
உண்ணாத வாய்கள் |
143. | வெண்ணி லாச்சுட ருந்தனி வெண்குடை எண்ணி லாப்புக 3ழானினி தாண்டநா ளுண்ணி லாப்பல வாயுள வாயின கண்ண னாரொடு காமக்க லங்களே. |
(இ - ள்.) வெள் நிலாச் சுடரும் - வெள்ளிய திங்களொளியை வெளிப்படுத்தும்; வெண்குடை - வெண்கொற்றக் குடையையும்; எண்இலாப் புகழான் - எண்ணற்ற புகழையுமுடையவனாகிய சுவலனசடி மன்னன்; இனிது ஆண்டநாள் - இனிமையோடு அரசாட்சி செய்துகொண்டிருந்த காலத்திலே; |
|
(பாடம்) 1. துன்னு நீள்முடி. 2. மேல்வளைந் திட்டனர். 3. ழானனி தானநாள். |