பக்கம் : 1141 | | சுதாரையும் விசயனும் இன்பக் கடலிலே மூழ்க, அமிததேசனும் சோதிமாலையும் காதலாற் களித்துக் கனவரை உலகம் சேர்ந்தார் என்க. | (707) | | வேறு | 1838. | எரிவிசயங் கோவேந்தி 1மன்ன ரென்னும் அரிவிசயங் 2கெடநின்ற வாணை வேலான் திருவிசயன் றிருவன்ன செல்வி யோடும் மருவிசயங் கெழுகோயின் மலர்ந்து புக்கான். | (இ - ள்.) கோ ஏந்தி - இறைமைத் தன்மையை மேற்கொண்டு மன்னர் என்னும் அரி - அரசர்கள் என்கிற பகைவர்கள், விசயம்கெட - தோற்றொழிய, நின்ற ஆணை - நிலைத்து நின்ற ஆணைச்சக்கரத்தை யுடையவனும், எரி விசயம் வேலான் - ஒளிமிக்க வெற்றியுடைய வேற்படையை ஏந்துபவனும் ஆகிய, திருவிசயன் - செல்வமிக்க விசயன் என்பான், திருவன்ன செல்வியோடும் - திருமகளை ஒத்த சுதாரை என்பாளுடன், மருவி - சேர்ந்து, சயம் கெழு கோயில் - வெற்றி பொருந்திய அரண்மனையின்கண்ணே, மலர்ந்து -மனம் மகிழ்ச்சியாலே மலரப்பெற்று, புக்கான் - புகுந்தான், (எ - று.) விசயன் திருமகள் போன்ற சுதாரையோடே மகிழ்ந்து அரண்மனையிலே புக்கான் என்க. கோ - இறைமைத்தன்மை. கோவேந்தி மன்னர் - கோவேந்திகளாகிய மன்னர் என்க. எரிவிசயம் - விளங்கும் வெற்றி. சயங்கெழு கோயில் - தனக்கு நிகரில்லாதவாறு சிறந்த அரண்மனை எனினுமாம். | (708) | | செவியறிவுறூஉ | 1839. | இனையனவா மிகுசெல்வ மிங்கு மாக்கிப் புனைமலர்வா னவர் 3போகம் புணர்க்கும் பெற்றி 4வினையதனின் விளைவின்ன தென்று நாளும் நினைமின்மோ நெறிநின்று நீர்மை மிக்கீர். | (இ - ள்.) இனையனவாம் மிகு செல்வம் - இத்தகையவாக மிகுகின்ற பெருஞ் செல்வ நுகர்ச்சியை, இங்கும் ஆக்கி - இவ்வுலகத்திலேயும் உண்டாக்கித்தந்து, புனைமலர் வானவர் போகம் புணர்க்கும் பெற்றி - இம்மை தீர்ந்த பின்னரும் கற்பக மலர்மாலையணிகின்ற தேவர்களுடைய இன்பத்தையும் கூட்டா நிற்கும் தன்மையையுடைய, வினையதனின் விளைவு | |
| (பாடம்) 1 ஏனைய. 2அரிவிசயங் கோவேந்தி நின்ற ஆணை. 3போகமும். 4 வினையினின். | | |
|
|