பக்கம் : 1149 | | | சிகையினோர் சிறுமுட் டீண்டச் சிதைந்தழுக் கொழுகு மாயின் நகைபெரி துடைத்து நாணா மிதனைதா 1மகிழ்த னெஞ்சே. | (இ - ள்.) தொகைமலர் அலங்கல் சூடி - தொகுக்கப்பட்ட மலர்களாற் புனைந்த மாலைகளை அணிந்து, தூநறும் சுண்ணம் அப்பி - தூய நறுமணங்கமழும் மணப் பொடிகளைத் திமிர்ந்து, புகை நனி கமழ ஊட்டி - மணப் புகைகளை நன்கு மணங் கமழும்படி ஊட்டி, புறஞ்செயப்பட்ட மேனி - போற்றப்பட்ட இவ்வுடல், ஓர் முள் சிகையின் தீண்ட - ஒரு சிறு முள் தனது நுனியாலே குத்திய மாத்திரையானே, சிதைந்து - ஊன் சிதைவுற்று, அழுக்கு ஒழுகுமாயின் - சீழ் வடிதலையுடைத்தாம் எனின், இதனை யாம் மகிழ்தல் - இத்தகைய இழிந்த இவ்வுடலை யாம் பொருளாகக் கொண்டு இன்புறுதல், நாணாம் - நாணுத் தகவுடைத்தாம், நகை பெரி துடைத்து - மேலும் இப் பேதைமை சான்றோரான் நகைக்கப்படுதலையும் மிக உடையதாகும், (எ - று.) “மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றும் சான்றவர் நோக்கார்கொல் நொய்யதோர் புக்கில்லை - யாக்கைக்கோர் ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே காக்கை கடிவதோர் கோல்Ó (நாலடி. தூய்த - 1) என்னும் நாலடியோடு இதனை ஒப்புக் காண்க. | (719) | | இதுவுமது | 1850. | ஒழுகிய முடையு நீரு | 2முதலகை யிகப்ப வூறும் அழுகலிவ் வள்ளல் யாக்கை யகம்புற மாயிற் றாயில் கழுகொடு கவருங் காக்கை 3கைத்தடி கொண்டு காத்தும் அழகுள சுழலு மன்னோ வாயிரச் சாதி மாதோ. | (இ - ள்.) ஒழுகிய முடையும் நீரும் - ஒழுகும் முறைமையுடைய மலமும் மூத்திரமும்; முதல - முதலவாகிய இழிபொருள்கள், கையிகப்ப -மிகுதியாக, ஊறும் - ஊறுதற்கு இடமான, அழுகல் - அழுகற் பண்டமாம், இ அள்ளல் யாக்கை - இந்த ஊன் சேற்றாலாய உடல், அகம் புறம் ஆயிற்றாயில் - உட்புறம் வெளிப்புறமாமாறு ஆய்விட்டால், கைத்தடி கொண்டு காத்தும் - கைத்தடியை வைத்துக்கொண்டு பாதுகாத்தவிடத்தும், கவரும் கழுகொடு காக்கை அழகுள ஆயிரச் சாதி சுழலும் மன்னோ - ஊன் கவர்ந்துண்ணும் கழுகு காக்கை முதலிய அழகுடைய உயிரினங்கள் ஆயிரவகைகள் புறம் போகாமற் சுற்றா நிற்கும், (எ - று.) | |
| (பாடம்) 1 மகிழ்துநெ. 2முதலிகை யுவப்ப - முதவிகை யுகப்ப. 3கைதடி. | | |
|
|