பக்கம் : 1152 | | ஆடலும் பாடலும் அழகும் காட்டி . “செருக் கயல் நெடுங்கண் சுருக்கு வலைப்படுத்துக் கண்டோர் நெஞ்சம் கொண்டகம் புக்கு பண்டேர் மொழியிற் பயன்பல வாங்கி வண்டிற் றுறக்கும் கொண்டி மகளிர்Ó (மணிமே.) என்பவாகலின், கலைபயில் மகளிர் கண்போல் கள்வர் என்றார். செல்வக்கு - செல்வத்திற்கு. ஊனம் - கேடு. பகை மன்னராற் கவரப்படாததாய், கள்வர் கைப்படாது நிலைத்த செல்வத்திற்கு வேறு ஊனம் யாதுளது என்று வினவினான் என்க. | (723) | | அமைச்சர் விடை | 1854. | ஆள்வினை மாட்சி யென்னு மிரண்டினு மரசு காத்துத் தோள்வினைக் களவு காவ லுள்வழித் துன்னல் செல்லா 1வாள்வினைத் தடக்கை வேந்தே வருவது மற்று முண்டோ கோள்வினை பயின்ற கூற்றங் குறுகல தாயி னென்றார். | (இ - ள்.) ஆள்வினை மாட்சி என்னும் இரண்டிலும் - ஆள்வினைத் திறம் இறைமாட்சி என்னும் இவ்விரண்டாலும் குறைவின்றி, அரசு காத்து - அரசன் தன்னை நன்கு பாதுகாத்து, காவல் உள்வழி - உலகினைக் காவல் செய்தல் உளதாய வழி, தோள்வினை - பகைமன்னர்கள் தம் தோள்வலியாற் கவரும் வினையும், களவு - கள்வர் வினையாகிய களவும், துன்னல் செல்லா - அக்காவலகப்பட்டவிடத்தே அணுக மாட்டா, வாள்வினைத் தடக்கை வேந்தே - வாட்போரில் வலிய பெரிய கையை உடைய அரசனே, வருவது மற்றொன்று உண்டோ - அக்காவலமைந்த செல்வத்திற்கு ஊனம் வருவது வேறு ஒன்றும் இல்லையாம், கோள்வினை பயின்ற கூற்றம் கொலைத்தொழில் நன்கு பயின்றுள்ள மறலிதான், குறுகலதாயின் என்றார் - அணுகாதாய்விடின் என்று கூறினர், (எ - று.) எனவே கூற்றங் குறுகுதல் இச் செல்வத்திற்கு உளதாகிய ஊனம் என்றபடி. மன்னரால் வவ்வலின்றாய்க் கள்வர்கைப் படாது நிலையின செல்வம் என்ற பயாபதி கூற்றிற்கு ஆள்வினைமாட்சி காத்துக் காவல் செய்தலால் அவ்வழி நிலையும் செல்வம், அஃதின்றேல் அழியும் என்பார் அதனை எடுத்தோதினர். காவலுள்வழி, நிலையுதலுடைத்தாயினும் கூற்றம் குறுகுதலால் ஊனம் உடைத்தென்றார் என்க. | (724) | |
| (பாடம்) 1 வாள்வலித். | | |
|
|