பக்கம் : 1155
 

     கூழைமை - கயமை. கடமையுமாம்.

     “அவ்வவ் விடம்புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்க்
     கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் ‘கூழைமை’ செய்யாமே.Ó

     என்னும் பெரியாழ்வார் திருமொழியினும் கூழைமை இப்பொருட்டாதல் காண்க. பிணிகளாலே சாதல் நேருதலின் கூற்றனுக்குப் பிணிகளைப் படையாக உருவகித்தார்,

 குதித்தல் - கடத்தல்,

     ‘கூற்றங் குதித்தலும்’ என்னும் திருக்குறளினும் இஃது ‘இப்பொருட்டாதல்’ காண்க, கூற்றத்தை மாற்றும் சூழ்ச்சி யாங்கள் பயின்றிலம் என்றார் என்க.

(727)
 
1858. ஆயினக் காலன் பாணி
     யாம்பிற வரச செல்வம்
மேயினங் களித்தி யாங்கள்
     விழைந்துயிர் வாழும் வாழ்க்கை
பாயிய வெழுத்த வேங்கை
     பாரிக்கு மளவிற் பைம்புன்
மாயிருஞ் சுருளை மேயு
     மான்மறி போலு மென்றான்.
 
     (இ - ள்.) ஆயின் அக்காலன் பாணியாம் - அவ்வாறாயின் அந்த மறலியின்
கையகத்தே உள்ளனம், பிறஅரச செல்வம் மேயினம் - வேறாகிய இவ்வரச செல்வ
நுகர்ச்சியில் பெரிதும் அழுந்தினேமாய், களித்து - அந் நுகர்ச்சியிற் களிப்படைந்து,
யாங்கள் விழைந்து - நாங்கள் மேலும் விரும்பி, வாழும் உயிர் வாழ்க்கை - வாழாநின்ற
உயிர்வாழ்க்கை, பாயிய எழுந்த வேங்கை - தன் மேலே பாய்தற்கு எழுந்த புலி, பாரிக்கும்
அளவில் - புறப்படும் அக்கால எல்லையுள், பைம்புல் மாயிருஞ்சுருளை - பசிய புல்லினது
கரிய பெரிய கொழுந்தினை, மேயும் மான்மறி போலும் என்றான் - மேய்கின்ற வலியற்ற
மான் குட்டியின் வாழ்க்கையை ஒப்பாம் என்று கூறினான், (எ - று.)

     பாணியாம் - கையின் கண்ணுள்ளேம்.

     பாணி - கை. பாணியம், பாணியாம் என நீண்டது.

     “வெறியயர் வெங்களத்து வேன்மகன் பாணி
     முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
     மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
     அறிவுடை யாளர்க ணில்.Ó (நாலடியார்)என்றார் பிறரும்.

      கடத்தற் கியலாத கூற்றின் கைப்பட்டிருந்தே யாம் வாழும் வாழ்க்கை, தன்மேற் புலி பாய முயலும்போதே புல்மேயும் மான் குட்டியின் வாழ்வினைப் போன்றதென்றான் என்க.

(728)

 
1859. அருங்களி யானை வேந்தே
     யத்துணைப் பாணி யுண்டோ
கருங்களி மதநல் யானை
     வாய்புகு கவள மேபோல்