பக்கம் : 1161 | | (இ - ள்.) அருள்புரி - உயிர்களிடத்தே அருள் பொழிகின்ற, அழல் அம் சோதி ஆழியான் - தீப் பிழம்புபோன்ற அழகிய ஒளியையுடைய அறவாழி அந்தணன், ஆதியில்லான் - தனக்கொரு முதலில்லாதவன், மருள்புரி வினைகட்கு என்றும் மறுதலையாய வாமன் - மயக்கத்தைச் செய்கின்ற ஞானாவரணீயம் முதலிய வினைகட்கு எப்போதும் முரண் ஆயவனாகிய வாமன் என்னும் திருப்பெயரையுடையோன், இருள்புரி உலகம் சேரா இயல்நெறி பயந்த பெம்மான் - இருள்சேர் இன்னாத் தருகின்ற வுலகத்தே பிறவாதபடி செல்லுதற்குரிய நன்னெறியைக் கூட்டும் மேலான மெய்ந்நூலினை உரைத்தருளிய பெருமான் என்று கூறப்படுகின்ற அருகக்கடவுளின், பொருள் புரி விழவு - மெய்ப்பொருள் உணர்ச்சிதரும் விழாவினை, காண்பார் - விழைவுடனே காண்பவர்கள், புண்ணிய உலகம் காண்பார் - புண்ணிய உலகங்களிலே சென்று பிறப்பார்கள், (எ - று.) ஆழியான் ஆதியில்லான் வினைகட்கு மறுதலையாய வாமன் இயல்நெறி பயந்த பெம்மான் பொருள்புரி விழவினை விரும்பிக் காண்போர் கற்ப உலகங்களிலே பிறந்து இன்புறுவர் என்க. | (736) | | | 1867. | கண்ணிய வறியன் செல்வ விழவினுட் களித்த மாந்தர் புண்ணியத் துகள்க ளென்னும் பொற்சுண்ணம் புதைய வாடிப் பண்ணியன் மொழியி னார்தங் கருங்கண்ணாற் பருகு நீர்மை விண்ணிய லுருவ மெய்தி விளங்கிவீற் றிருப்ப ரன்றே. | (இ - ள்.) கண்ணிய - சான்றோர்களாற் கருதப்பட்ட, அறிவன் - அருகனுடைய, செல்வ விழவினுள் - சிறந்த விழா நிகழ்ச்சியிலே எழுந்த, புண்ணியத்துகள்கள் என்னும் - அறப்பயனுடைய துகள்கள் என்று கூறப்படுகின்ற, பொற்சுண்ணம் புதைய ஆடி - பொற்பொடி தம்முடல் போர்ப்ப அவற்றுள் முழுகி, களித்த மாந்தர் - அவ்விழாக் காட்சியிலே மகிழ்ச்சி கொண்ட மானிடர்கள், பண் இயல் மொழியினார்தம் - பண் போன்ற இனிய மொழிகளையுடைய மகளிருடைய, கருங்கண்ணாற் பருகும் நீர்மை - கரிய கண்களாலே விரும்பிப் பருகும் தன்மையை உடைய, விண் இயல் உருவம் எய்தி - விண்ணோர்க்கியன்ற அழகிய உருவத்தை அடைந்து, விளங்கி - புகழான் விளக்கமுற்று, வீற்றிருப்பர் அன்றே - அல்லலின்றி அமர்ந்து வாழ்வார்கள், (எ - று.) அறிவனுடைய செல்வ விழவினுள், களித்த மாந்தர் அழகுடைய உருவம் பெற்று விளக்கமுடையராய் நீடு வாழ்வார் என்றபடி. | (737) | |
| | | |
|
|