பக்கம் : 1162
 

விழா முரசு அறைதல் கேட்ட நகரம் மகிழ்தல்

1868. எல்லைசான் முரசிற் சாற்றி
     யின்னன வறைத லோடும்
மல்லன்மா நகரங் கேட்டே
     வானுல கிழிந்த தேபோன்
முல்லைவான் கண்ணி சூடி
     1முகிழ்நகைக் கலங்க டாங்கிச்
செல்லும்வாய் தோறுஞ் செல்வ
     விழவணி 2தேர்த்த தன்றே.
 
     (இ - ள்.) எல்லைசால் முரசில் சாற்றி - நகரின் எல்லை முழுதும் ஒலியுடைய
முரசினை அறைந்து, இன்னன அறைதலோடும் - இத்தகைய மொழிகளை வள்ளுவர்கள் கூறி
அறிவித்தவுடனே, மல்லல்மா நகரங் கேட்டே - வளப்பமுடைய பெரிய நகரத்தே வாழுகின்ற
மக்கள் கேள்வியுற்று, வான் உலகு இழிந்ததேபோல் - தேவருலகம் இப்பூமியின்கண் வந்து
இறங்கினாற்போன்று, முல்லைவான் கண்ணி சூடி - முல்லை மலராலாய தூய
முடிமாலையணிந்து, முகிழ்நகைக் கலன்கள் தாங்கி - ஒளி தோன்றித் திகழ்தலையுடைய
அணிகலன்களை அணிந்து, செல்லும் வாய்தோறும் - போகுமிடங்கடோறும், செல்வ விழவு
அணி தேர்த்தது அன்றே - சிறப்புடைய விழாவிற்குரிய ஒப்பனைகளைச் செறியப்
புனைந்தனர், (எ - று.)

     நகரம் தேர்த்தது என்க. நகரம் : ஆகுபெயர்.

     இவ்வாறு விழா முரசறைந்தவுடனே மக்கள் கண்ணிசூடிக் கலன்கள் தாங்கிச் செல்லும்வாய் தோறும் விழாவிற்குரிய ஒப்பனை செய்தனர் என்க.

(738)

 

இதுவுமது

1869. இன்னிசை முரசங் கேட்டே
மெய்பெரி தினிய கேட்டா
மன்னிய நங்கள் வாணாள்
வாழ்கநம் மிறைவ னென்னாப்
பொன்னியன் மலருஞ் சாந்துஞ்
சுண்ணமும் புகையும் பொங்கத்
துன்னிய நகர மாந்தர்
3துறக்கம்பெற் றவர்க ளொத்தார்.
 
 

     (பாடம்) 1 முகிழ்நகை. 2 தொத்த. 3துறக்கம் புக்கவர்க.