பக்கம் : 1165
 

அந்தணர் வெள்ளணி பூண்டு விழவிற் கெழுதல்

1873. வெண்டுகி லுடுத்துவெண் சாந்து மெய்வழித்
தொண்டிரண் மல்லிகை யொலியல் சூடினார்
வண்டிரண் மணிமுத்தும் வயிரச் சாதியும்
கொண்டிய லணியொடு கோலந் தாங்கினார்
 
     (இ - ள்.) வெண்துகில் உடுத்து - வெண்மை நிறம் அமைந்த ஆடைகளையே
உடுத்துக்கொண்டு, வெண்சாந்து மெய்வழித்து - வெண்ணிறமமைந்த சந்தனத்தையே
உடலில் நீவிக்கொண்டு, ஒண் திரள் மல்லிகை ஒலியல் சூடினார் - ஒள்ளிய திரட்சியமைந்த
மல்லிகை மலராலாய வெண்மலர் மாலையைப் புனைந்து கொண்டு, வண்திரள் மணிமுத்தும்
வயிரச் சாதியும் கொண்டு இயல் அணியொடும் கோலந் தாங்கினார் - அணிகலன் களுள்
வைத்தும் வளமுடையவாய்த் திரண்ட மணியாகிய முத்துக்களையும் வயிரமணி
வகைகளையுமே கொண்டு இயன்ற வெண்மை நிறமான அணிகலன்களையே அணிந்து
தம்மை அழகு செய்துகொண்டனர், (எ - று.)

     வேதியர் வெளிய ஆடையுடுத்து வெண்சாந்து பூசி மல்லிகை மாலை சூடி வெண்ணிற
மணியணிகள் பூண்டு எல்லாவற்றானும் வெண்மை யுடையராய் ஒப்பனை செய்து
கொண்டனர் என்க.

(743)

 

இதுவுமது

1874. வெண்மருப் பிரட்டைய வேழ மீமிசைக்
கண்மருட் டுறுப்பன கமலப் பூப்பலி
விண்மருட் டுறுப்பன வேந்தி வேதியர்
மண்மருட் டுறுப்பதோர் வகையின் மன்னினார்.
 
     (இ - ள்.) வெண்மருப்பு இரட்டைய வேழம் மீமிசை - வெண்மையான
கோடுகளையுடைய இரண்டாகிய யானைகளின் எருத்தத்தின்மேல், கண் மருட்டுறுப்பன -
கட்பொறியை வியக்கச் செய்வனவாகிய, கமலப் பூப்பலி - வெள்ளைத் தாமரைப் பூவாகிய
கடவுட்கிடும் பலி, விண் மருட்டுறுப்பன - ஏந்தி - தேவர்கள் வியக்குமாறு
விளங்குவனவற்றைத் தாங்கியவராய், மண் மருட்டுறுப்பதோர் வகையின் - இம்மண்ணுலகம்
மருள்வதற்குக் காரணமானதொரு முறையோடே, வேதியர் மன்னினார் - அந்தணர்கள்
நிலைபெற்றனர், (எ - று.)

     ஏனையவற்றிற்கு இயைய வெண்கமலப்பலி என்க.