மேலும் அரசர்கள் செங்கழுநீர் மலர்மாலை அணிந்து செந்நிற ஆடையுடுத்து செந்நிறமுடையவனவாக ஒப்பனை செய்யப்பட்ட யானைகளிலே ஏறிப் பூப்பலியோடே தோன்றினர் என்க. |
(746) |
|
வணிகர் பொன் அணி அணிந்து வருதல் |
1877. | பொன்மலர்க் கண்ணியர் பொன்செய் 1சுண்ணமொய் மின்மலர் மேனிமேல் விளங்க வப்பினார் மென்மல ரணிநகை மிளிருங் கோலமோ டின்மல ரிருநிதிக் கிழவ ரீண்டினார். |
(இ - ள்.) பொன்மலர்க் கண்ணியர் - பொன்னாலியன்ற மலர்மாலையை முடியின் உடையராய், மொய்மின் மேனிமேல் - செறிந்த ஒளிதிகழும் தம்முடலின்மேல், பொன்செய் சுண்ணம் - பொன்னாற் செய்யப்பட்ட பொடியை, விளங்க அப்பினார் - திகழும்படி திமிர்ந்தவராய், மென்மலர் அணிநகை மிளிரும் கோலமோடு - மெல்லிய மலராலாய மாலைகளும் அணிகலன்களும் திகழ்கின்ற எழிலோடே, இன்மலர் இரு நிதிக் கிழவர் ஈண்டினார் - இனிதே பெருகும் பெரிய செல்வராய வணிகர்கள் குழீ இயினார், (எ - று.) மலரிருநிதி : வினைத்தொகை. வணிகர் பொன்னிற மலர்மாலை யணிந்து பொற்சுண்ணம் அப்பி பொன்னிறமே திகழ ஈண்டினர் என்க. |
(777) |
|
இதுவுமது |
1878. | பேரொளிப் பீதக வுடையர் பைம்பொனால் ஆரொளி தழுவிய வலர்செய் பூப்பலி 2போரொளி யானைமே னிரைத்துப் போந்தனர் வாரணி வனமுலை யவரொ டென்பவே. |
(இ - ள்.) பேர் ஒளிப் பீதக வுடையர் - மிக்க ஒளியை உடைய பொன்னாடையை உடுத்தியவராய், பைம்பொனால் ஆர் ஒளி தழுவிய பூப்பலி - பசிய பொன் ஒளியாலே தழுவப்பட்ட மலராற் செய்தற்குரிய பூப்பலியை, போர் ஒளி யானைமேல் - போரிடத்தே புகழுடைய யானையின் பிடரின்மேல், நிரைத்துப் போந்தனர் - நிரலாக வைத்துக்கொண்டு வருவாராயினர், வாரணி வனமுலை அவரொடு என்பவே - கச்சணிந்த அழகிய முலைகளையுடைய தம் மகளிர்களுடனே, என்று கூறுவர் சான்றோர், (எ - று.) |
|
|
(பாடம்) 1 சுண்ணமேய். 2 பேரொளி |