பக்கம் : 1171 | | மயிற்பீலி வட்டமும் ஆலவட்டமும் கதிரவனை மறைத்து நெருங்கின; அவ்விடத்தே கால் இயங்கவும் இடமில்லை என்க. | (784) | | | 1885. | சந்தனஞ் செறிந்தன செப்புந் தண்புகைக் கந்தமே நிறைந்தன கரண்ட கங்களும் 1கொந்துமொய்ம் மலர்நிறை கோடி கங்களும் உந்தியொன் றொன்றினை யூன்று கின்றவே. | (இ- ள்.) சந்தனம் செறிந்தன செப்பும் - சந்தனக் குழம்பு நிறைக்கப்பட்ட செப்புகளும் தண்புகைக் கந்தமே நிறைந்தன கரண்டகங்களும் - குளிர்ந்த மணப்புகை நிறைக்கப்பட்ட செப்புகளும், கொந்து மொய்ம் மலர் நிறை கோடிகங்களும் - கொத்தாகச் செறிந்த மலர்களால் நிறைக்கப்பட்ட பூந்தட்டுகளும், உந்தி ஒன்று ஒன்றினை ஊன்றுகின்றவே - ஒன்றனை ஒன்று தள்ளி நெருக்குற்றன, (எ - று.) செப்பும் கரண்டகமும் கோடிகமும் ஒன்றினை ஒன்று நெருங்கித் தள்ளின என்க. | (785) | | | 1886. | நிரந்தன பூப்பலி நிரைகொண் மாரியாய்ச் சொரிந்தன சுரும்பிவர் துணர்கொள் பூமழை பரந்தன மங்கலப் பதாகை யவ்வழிக் கரந்தன கருவினைக் குழாங்க ளென்பவே. | (இ - ள்.) பூப்பலி நிரந்தன - கடவுட்கிடும் பூப்பலிகள் யாண்டும் பரவின, சுரும்பு இவர் துணர்கொள் பூமழை - வண்டுகள் மொய்க்கின்ற கொத்துக்களைக் கொண்ட மலர்மாரி, நரைகொள் மாரியாய்ச் சொரிந்தன - ஒழுங்குபட்ட மழை போன்று மிக்குப் பொழியப்பட்டன, மங்கலப் பதாகை - மங்கலத்திற்கு அறிகுறியான கொடிகள், பரந்தன - பரவின, அவ்வழி - அவ்விடத்தே, கருவினைக் குழாங்கள் கரந்தன என்பவே - பிறப்பிற்குக் காரணமான வினைக் கூட்டங்கள் மட்டும் மறைந்தன என்று அறிவுடையோர் கூறுவர், (எ - று.) கரு - பிறப்பு. கருவினை - தீவினை எனினுமாம். கடவுட்கிடும் பூப்பலி மழைபோல மிக்குப் பொழிந்தன. பரந்தன மங்கலப் பதாகை, கருவினைக் குழாம் ஒளிந்தன என்க. | (786) | |
| (பாடம்) 1 கொந்துமேய். | | |
|
|