பக்கம் : 1175
 
 
1893. ஏழிய லுலகிலுள் ளிருளுங் கையகன்
றாழியல் 1வினைகளோ டவிய 2வாயிரம்
தாழொளி சுடரவன் றன்னைக் காணவோர்
சூழொளி மண்டிலஞ் சுடரத் தோன்றுமே.
 
     (இ - ள்.) ஏழுஇயல் உலகின் உள் இருளும் கையகன்று - ஏழாக இயலுகின்ற
உலகிலே பரவியுள்ள அறியாமையென்னும் அக இருள் முழுதும் அகன்று, ஆழ் இயல்
வினைகளோடு அவிய - பிறவிகளில் உயிரை அழுத்தும் இயல்பினையுடைய
வினைகளுடனே அழிந்தும் போம்படி, ஆயிரம்தாழ் ஒளி சுடரவன் தன்னைக் காண -
ஆயிரமாகிய தங்குதலையுடைய ஒளிக்கற்றைகள் மிளிருகின்ற அருகக்கடவுளைக்
காணுமிடத்தே, ஓர் சூழ் ஒளி மண்டிலம் சுடரத் தோன்றுமே - ஒரு ஒளியாற் சூழப்பட்ட
வட்டம் திகழ்ந்து தோன்றுவதாம், (எ - று.)

     காண - காணும்போது . சுடர - சுடர்ந்து.

(783)

 
1894. கழுமிய பானிலாக் கதிரின் கற்றைகள்
செழுமணித் திரண்மிசைச் செறிந்த போல்வன
எழுவளர்த் தனையதோ ளியக்க ரேந்தின
3தொழுதகை யுருவின கவரி தோன்றுமே.
 
     (இ - ள்.) கழுமிய பால் நிலாக் கதிரின் கற்றைகள் - செறிந்த பால்போன்ற
நிலாவொளிக்கற்றைகள், செழுமணித் திரள்மிசைச் செறிந்த போல்வன - செழிப்புடைய
மணிகளின் குவியலின் மிசை அடர்ந்தது போன்றனவாய், தொழுதகை உருவின -
தொழுதற்குரிய தன்மையுடைய வடிவமுடையனவாய், எழுவளர்த்தனைய தோள் இயக்கர்
ஏந்தின கவரி தோன்றுமே - தூண் திரட்டினால் ஒத்த தோள்களையுடைய
இயக்கர்களுடைய கையகத்தே ஏந்தப்பட்ட சாமரைகள், விளங்கித் தோன்றின, (எ - று.)

     மணிக் குவியலின் மேலே நிலாக்கற்றைகள் செறிந்தாற்போன்ற இயக்கர் ஏந்திய கவரி
தோன்றும் என்க.

(784)

 
1895. பருகலாம் பானிலாப் பரந்த மாமணி
அருகெலா மணிந்தக டம்பொ னார்ந்துமேற்
4பெருகலாஞ் சுடரொளி பிறங்கி நின்றதம்
முருகுலாம் பிண்டியான் குடையின் மும்மையே.
 

    (பாடம்) 1 வினையளோ. வாயிரத். 3தொழுநகை. 4 பெருகெலாம்.