பக்கம் : 1176 | | (இ - ள்.) அம் முருகு உலாம் பிண்டியான் குடையின் மும்மை - அந்த மணங்கமழும் அசோக நீழலுடைய அருக பரமேட்டியின் மூன்று பகுதித்தாய குடை; பருகல் ஆம் பால் நிலாப்பரந்த - உண்ணற்குரியதாகிய பால்போன்ற வெண்மையான நிலவொளி பரந்தனவாகிய, மாமணி அருகெலாம் அணிந்து - சிறந்த மணிமாலைகள் விளிம்பில் அணியப்பட்டு, அகடு அம் பொன் ஆர்ந்து - நடுவிடத்தே அழகிய பொன்றகடு பொருந்தப் பெற்று, மேல் பெருகல் ஆம் சுடர் ஒளி பிறங்கி - மேற்பகுதியிலே, பெருகா நின்ற சுடர்க்கற்றைகள் திகழ, நின்றது - நின்றது, (எ - று.) பிண்டியான் குடை பால்நிலாப் பரந்த ஒளிபிறங்கி நின்றன என்க. | (785) | | 1896. | அழல்வளர்த் 1தனையன தழையு மவ்வழல் தல்வளர்த் தனையன மலருந் தாமரைப் பொழில்வளர் வளையமும் பொதுளி வண்டினம் குழைவள ரசோகின்மேற் 2குளிறு கின்றவே. | (இ - ள்.) வண்டினம் - வண்டுகள், அழல் வளர்த்தனையன தழையும் - தீயை வளர்த்தாலொத்த தழைகளிடத்தேயும், அவ்வழல் தழல் வளர்த்தனையன மலரும் - அந்நெருப்பினது பிழம்பை வளர்த்தாற்போன்ற மலர்களிடத்தேயும், தாமரைப் பொழில் வளர் வளையமும் - தாமரைக் காட்டிடத்தே வளர்ந்தவாய சுருள்களிடத்தேயும், பொதுளி - மொய்த்து, குழைவளர் அசோகின்மேல் - தழைகள் செழித்து வளர்ந்துள்ள அசோக மரத்தின் மேலே, குளிறுகின்றவே - ஆரவாரித்தன, (எ - று.) தாமரை வளையம் - அசோக மரத்தின்கண் அணியப்பட்டதென்க. வண்டினம் தழையினும் மலரினும் வளையத்தினும் பொதுளிப் பாடு கின்றன என்க. | (786) | | 1897. | மாமழைக் கண்ணியர் மருங்கு போல்வன தூமழை வளர்கொடி துவன்றிப் பத்திகள் 3பாமழை யுருவுகள் பலவுந் தோன்றவே பூமழை பொன்னிலம் புதைய வீழ்ந்தவே. | |
| (பாடம்) 1 தனையகன் கழை. 2 குளிர்செய். 3 மாமழை. | | |
|
|