பக்கம் : 1178
 

     ஞலம் - நலம்: நகரப் போலி. மிதுனம் - இணைப்பறவை.

     விஞ்சையர்தம் மாதரோடே விரவ மேலெலாம் கின்னர மிதுனம் தோன்றும் என்க.

(789)
 
1900. எரிமணி நெடுமுடி யிமைப்பிற் செங்கணப்
புரிமணி வண்ணனும் பொன்செ யாழியத்
திருமணி வண்ணனுந் தேவி மார்களும்
அருமணி வண்ணனுக் கருகு தோன்றினார்.
 
     (இ - ள்.) எரிமணி நெடுமுடி இமைப்பின் - ஒளிவிடுகின்ற மணிகள் பதித்த நீண்ட
முடிக்கலனின் ஒளிர்தலோடு, செங்கண் அப்புரி மணிவண்ணனும் - சிவந்த
கண்களை யுடைய முத்துப் போன்ற வெண்ணிறமுடைய அவ்விசயனும், பொன் செய் ஆழி
அத்திருமணி வண்ணனும் - பொன்னாலியன்ற ஆழிப் படையை உடைய மரகத
மணிபோன்ற நீல வண்ணனாகிய அத் திவிட்டனும், தேவிமார்களும், மிருகாபதி முதலிய
கோப்பெருந்தேவியர்களும், அருமணி வண்ணனுக்கு - பெறற்கரிய மணிபோன்று திகழ்கின்ற
திருமேனியை உடைய பயாபதி வேந்தனுக்கு, அருகு தோன்றினார் - பக்கத்தே
எய்தினார்கள், (எ - று.)

     விசயனும் திவிட்டனும் தேவிமார்களும் பயாபதி வேந்தன் பக்கத்தே தோன்றினர் என்க.

(790)

 
 
1901. ஒண்டமர் மணிகளு 1மொளிர்பொற் சாதியும்
கொண்டன ரியற்றிய கோலச் செய்கையால்
கண்டவர் கண்கவர் நகரங் காண்டலும்
விண்டுதிர் வினையினன் வேந்த னாயினான்.
 
     (இ - ள்.) ஒண் தமர் மணிகளும் - ஒள்ளிய தொளையுடைய மணிகளையும், ஒளிர்
பொன் சாதியும் - ஒளிருகின்ற ஆடக முதலிய பொன் வகைகளையும், கொண்டனர்
இயற்றிய - கைக்கொண்டு தொழில் வல்லுநரால் இயற்றப்பட்ட, கோலச் செய்கையால் -
ஒப்பனைச் செயலாலே; கண்டவர் கண்கவர் - பார்த்தவருடைய கண்களைக் கவருகின்ற
அழகுடைத்தாய, நகரங் காண்டலும், அருக பரமேட்டியின் திருக்கோயிலைக் கண்ட
துணையானே,     
 

     (பாடம்) 1 மொளிபொற்.