வேந்தன் - பயாபதி மன்னன், விண்டு உதிர் வினையினன் ஆயினான் - வேறுபட்டு உதிர்ந்தொழிந்த வினையை உடையன் ஆயினான், (எ - று.) காண்டலும் வேந்தன் வினைகள் உதிர்ந்தன என்றபடி. |
(791) |
|
1902. | பணியொடு நறுவிரை மெழுகிப் பன்மலர் அணியுடை 1யனையன பலவுஞ் செய்தபின் மணிமுடி நிலமுற வணங்கி வாமன்மேற் றுணிபடு வினையினன் றுதிதொ டங்கினான். |
(இ - ள்.) நறு விரை மெழுகி - நறுமணங் கமழும் சாந்தாலே திருக் கோயிலை மெழுகுவித்து, அணி உடையனையன பன்மலர் பலவும் செய்த பின் - அழகுடைய பல மரலாற் செய்யும் பலியும் இன்னோரன்ன பிறபலவும் செய்ததன் பின்னர், பணியொடு - பணிவுடமையோடே, மணிமுடி நிலம் உற வணங்கி - மணிபதித்த தன் முடிக்கலன் பூமியிலே பொருந்துமாறு வீழ்ந்து வணக்கம் செய்து, வாமன்மேல் - அருகபரமேட்டியைக் குறித்து, துணிபடு வினையினன் - அற்றொழிந்த வினையை உடைய பயாபதி வேந்தன், துதி தொடங்கினான் - துதித்துப் பாடலை மேற்கொண்டான், (எ - று.) மணச் சாந்தாலே மெழுகிப் பன்மலர் அணிபலவும் செய்து பின் முடி நிலமுற வணங்கி வாமன்மேல் துதி தொடங்கினன் என்க. துணிபடு வினையினன் என்றார், வினை அகலுதற்குரிய நெறிச் செல்லும் நல்வினையுடைமை தோன்ற. |
(792) |
|
பயாபதி மன்னன் அருகபரமேட்டியைத் துதித்துப் பாடுதல் |
வேறு |
1903. | மூவடிவி னாலிரண்டு சூழ் 2சுடரு நாண முழுதுலக 3முடியெழின் முளைவயிர 4நாற்றித் தூவடிவி னாலிலங்கு வெண்குடையி னீழற் 5சுடரோயுன் னடிபோற்றிச் சொல்லுவதொன்றுண்டால் சேவடிக டாமரையின் சேயிதழ்க டீண்டச் சிவந்தனவோ சேவடியின் செங்கதிர்கள் பாயப் பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து புலங்கொளா வாலெமக்கெம் புண்ணியர்தங் கோவே. |
|
|
(பாடம்) 1 காமனை யலவுஞ். 2 சுடரி. 3 மூடி முளை. 4 நாறி. 5 சுடரோடி போற்றி. |