பக்கம் : 1180
 

      இது முதல் 10 செய்யுள் ஒரு தொடர்

     (இ - ள்.) மூவடிவினால் - மூன்று வடிவினையுடையதாகி, இரண்டு சூழ் சுடரும் நாண
- உலகத்தைச் சுற்றி வருகின்ற ஞாயிறும் திங்களுமாகிய இரண்டு ஒளி மண்டிலங்களும்
நாணும்படி, முழுதுலகம் மூடி - உலகங்கள் அனைத்தையும் கவிழ்த்து, எழில் முளை வயிரம்
நாற்றி - அழகைத் தோற்றுவிக்கின்ற வயிரமணி மாலைகள் தூங்கா நிற்ப, தூவடிவினால்
இலங்கு - தூய உருவத்தோடே திகழ்கின்ற, வெண்குடையின் நீழல் - வெள்ளை
வண்ணக்குடை நிழலின்கண் வீற்றிருந்த சுடரோய் - ஒளிப்பிழம்பான அருக பரமேட்டியே!,
உன் அடி போற்றி - உன்னுடைய திருவடிகளை வணங்கி, சொல்லுவது ஒன்றுண்டால் -
அடியோம் கூறக்கிடந்த விண்ணப்பம் ஒன்றுளது அஃதியாதோவெனில், சேவடிகள் -
உன்னுடைய சிவந்த அடியிணைகள், தாமரையின் சேயிதழ்கள் தீண்டச் சிவந்தனவோ - நீ
நடந்த தாமரை மலரின் செந்நிற இதழ்கள் பொருந்தியதாலே சிவப்பு நிறம் எய்தினவோ,
அன்றி, சேவடியின் செங்கதிர்கள் பாய - உன்னுடைய சிவந்த திருவடியின் செந்நிற ஒளி
அம்மலரிடத்தே பாய்ந்தமையாலே, பூ வடிவு கொண்டனவோ - அத்தாமரை மலர்
செந்நிறமான உருவத்தை எய்தினவோ, பொங்கு ஒளிகள் சூழ்ந்து - மிக்க ஒளிக்கற்றைகள்
சூழப்பெற்று, எமக்குப் புலங்கொளாவால் - எம் போன்றோர்க்கு
அறியவொண்ணாதனவாயிருந்தன, எம் புண்ணியர்தம் கோவே - எம் அறத்தகை
அந்தணர்கட்குத் தலைவனே, அதனை அறிவித்தருள வேண்டும்,    

(793)

 
1904. கருமாலை வெவ்வினைகள் காறளர நூறிக்
     1கடையிலா வொண்ஞானக் கதிர்விரித்தா 2யென்றும்
அருமாலை நன்னெறியை முன்பயந்தா யென்றும்
     3அடியேமுன் னடிபரவு மாறறிவ தல்லால்
திருமாலே 4தேனாரு மரவிந்த மேந்துத்
     திருவணங்கு சேவடியாய் தேவாதி தேவ
பெருமானே நின்பெருமை நன்குணர மாட்டார்
     பிணங்குவார் 5தம்மைவினைப் பிணக்கொழிக்க லாமே.
 

     (பாடம்) 1 கடையிலா, ஞானக்கதிர். 2 யின்று. 3 அடியேம் பரவுமாறறிவ.

     4 தேனா ரரவிந்த. 5 தம்மைப்பிணக் கொழிக்க.