பக்கம் : 1182 | | அவ்வடிகளில் புகல்புக்கது என்பேனோ, விளியாத மெய்ப்பொருளை - அழிவில்லாத மெய்ப்பொருளின்றன்மையை, நீ விரித்தாய் என்கோ - நீ அறிந்து கூறினாய் என்பேனோ அன்றி, நீ விரித்தவாறே - நீ கூறியவண்ணமாய், மெய்ப்பொருள் விரிந்தது என்கோ - அம்மெய்ப்பொருள் உளவாயிற்று என்பேனோ, தெளியாமலில்லை - எளியேமாயினும் எம்மால் உன் திருவடிப் பெருமை சிறிது அறியப்படாமலில்லை, தெளிந்தாலும் செவ்வே மெய்ம்மை தெரிந்து உரைக்கலாமே - சிறிது அறிந்த துணையானே உன் திருவடிப் பெருமையை நன்கு தெரிந்து கூற எம்மனோரால் இயல்வதேயோ, (எ - று.) | (795) | | களியானை நாற்கோட்ட தொன்றுடைய செல்வன் | 1906. | 1கண்ணொரா யிரமுடையான் கண்விளக்க மெய்தும் ஒளியானை யூழிமுத 2லானானை யோங்கி உலகளவு மாகியுயிர் தமக்குறுகண் செய்யா அளியானை யாரழலஞ் சோதிவாய் சூழ்ந்த அருளாழி 3யானையிணை யடிபரவு வார்கட் கெளியானை யெந்தைபெரு 4மானையே யல்லால். இறையாக வீங்கொருவ ரெண்ணுமா றென்னே. | (இ - ள்.) நால் கோட்டது களியானை ஒன்றுடைய செல்வன் - நான்கு கோடுகளை உடைத்தாகிய களிப்புமிக்க ஐராவதம் என்னும் ஒரு சிறந்த யானையை உடைய செல்வமிக்கவனும், கண் ஓராயிரம் உடையான் - ஓராயிரம் கண்களையுடையவனுமாகிய தேவேந்திரன், கண் விளக்கம் எய்தும் - அவ்வாறு சிறப்பாகப் பெற்றுள்ள ஆயிரங்கண்களாலும் நுகர்ந்து காட்சியின்பத்தாற் றிகழ்தற்குக் காரணமான, ஒளியானை - ஒளிப்பிழம்- பானவனை, ஓங்கி - மிக்கு, உலகு அளவுமாகி - உலகத்தின் விரிவு முழுதும் தன்னுள்ளடங்குமளவின் விரிந்து, உயிர் தமக்கு உறுகண் செய்யா அளியானை - எவ்வுயிர்க்கும் எத்துணையும் இன்னல் செய்யாமையாகிய அருளையுடையவனை, ஆர் அழல் அம்சோதிவாய்சூழ்ந்த அருள் ஆழியானை - பொருந்திய தீப்பிழம்பாகிய அழகிய ஒளிக்கற்றை தன்னிடத்தே சூழப்பெற்ற அருள் ஆழியை உடையவனை, ஊழி முதல் ஆனானை - ஊழிக் காலத்தேயும் அழிவின்றி நிற்றலுடையவனை, அடி பரவுவார்கட்கு எளியானை - தனது திருவடியில் வணங்கும் அடியவர்கட்கு எளிதே காணப்படுபவனை, எந்தை பெருமானை என் தந்தையாகிய பெரியவனையே, அல்லால் - இறைவனாகக் கருதி வழிபடுவதன்றி, ஈங்கு - இவ்வுலகத்தே, ஒருவர் இறையாக எண்ணும் ஆறு என்னே - வேறு ஒருவரைக் கடவுளாக எண்ணுதற்கியன்ற, சமயத்தார்களின் பேதைமைதான் எத்தகைத்தோ அறிகிலோம், (எ - று.) | (796) | |
| (பாடம்) 1 கண்ணா. 2 லானையடி. 3 யானை. 4 மானையல்லால். | | |
|
|