பக்கம் : 1184
 
 
1908. 1வானோர்த முலகுடைய மானீல வண்ணன்
     மகிழ்ந்திறைஞ்சு 2மாலையணி மணிமுடிமேல் 3வைகா
4ஊனாரு மறவாழி யோடைமால் யானை
     5உடையான்ற னொளிமுடியின் மேலுரையோ நிற்கத்
6தேனாரு மரவிந்தஞ் சென்றேந்தும் போழ்து
     திருவடிகள் செந்தோடு தீண்டாவே யாகில்
7ஆனாவிம் மூவுலகு மாளுடைய பெம்மான்
     அடியுறுவா 8ரின்மைதா மறிவுண்ட தன்றே.
 
     (இ - ள்.) வானோர் தம் உலகுடைய மால் - தேவருலகத்தை யுடையவனாகிய
திருமாலாகிய, நீலவண்ணன் - நீலநிறமுடையவன், மகிழ்ந்து இறைஞ்சும் - மகிழ்ச்சியுடனே
வணங்காநின்ற, மாலையணி மணிமுடிமேல் - மலர் மாலையணிந்த மணிகளையுடைய
அவனது திருமுடியின்மேல், வைகா - பொருந்த மாட்டா, ஊனாரும் மறவாழி -
பகைவர்ஊன் பொருந்திய மறத்தன்மையுடைய ஆழிப்படையையும், ஓடைமால் யானை -
முக படாம் அணிந்த பெரிய யானையினையும், உடையான்றன் - உடையவனாகிய
இந்திரனுடைய, ஒளிமுடியின் - ஒளியுடைய முடியின்மேல் (பொருந்துமோ எனில்),
உரையோம் - யாம் அது கூறமாட்டோம் (கூறாமலே அமையும் என்றபடி), நிற்க அவ்வினா
ஒழிக, தேன் ஆரும் அரவிந்தம் சென்று ஏந்தும் போழ்து - தேன்பொதுளிய தாமரை
மலர்தான் சென்று அத்திருவடிகளைத் தாங்குமிடத்தும், திருவடிகள் செந்தோடு தீண்டாவே
யாகில் - அருகபரமேட்டியினுடைய திருவடிகள் அத்தாமரையின் செவ்விய இதழ்களைத்
தானும் பொருந்தமாட்டா எனின், இம் மூவுலகும் ஆனா ஆளுடைய பெம்மான் - கீழ்
மேல் நடு என்னும் இம்மூன்று உலகங்களையும் ஒழிவின்றி ஆளுதலையுடைய
பெரியோனாகிய அருகனுடைய, அடியுறுவார் இன்மைதான் - திருவடியைச் சென்று
பொருந்தும் தகுதியுடையார் யாரும் இலர் என்னும், தன்மை அறிவுண்டது அன்றே -
நம்மால் நன்கு அறியப்பட்ட தொன்றாயிருந்த தன்றோ, (எ - று.)

(798)

 
1909. தேனருளி மந்தாரச் செந்தாமந் தாழ்ந்து
திரளரைய செம்பவளம் வம்பாக வூன்றி
வானருளி மாணிக்கச் செங்கதிர்கள் வீசி
மதிமருட்டும் வெண்குடையோர் மூன்றுடைய வாமன்
 

     (பாடம்) 1 வானோருலகுடைய. 2 மாலைமணி. 3 வைக. 4 ஊனார். 5 உடையானொ.

     6 தேனாரரவிந்தம். 7 ஆனாலிம். 8 ரின்மையறிவுண்ட, ரிம்மையறி.