பக்கம் : 1186
 

     (இ - ள்.) வெவ்வினை - பிறவிக்குக் காரணமான வெவ்விய வினைகள், வெரூஉ -
தம்பால் நிற்றலை அஞ்சி, விண்டு - வேறுபட்டு, உதிர - உதிர்ந்துபோகும்படி, நூறி - தம்
தவவொழுக்கத்தாலே நீறுபடுத்தி, விரிகின்ற மெய்ஞ்ஞானச் சுடர்விளக்கும் மாட்டி -
விரிதலையுடைய மெய்யறிவென்னும் ஒளிமிக்க விளக்கையும் தன்னுள்ளே கொளீஇ,
கண்டார்கள் - உன்னைக் காணாநின்ற சான்றோர்கள், நின் நிலைமை கண்டு ஒழுக - உனது
தன்மையை உள்ளவாறு கண்டு அதற்கேற்றவாற்றான் ஒழுகுவாராக, யான் - எளியனாகிய
யானோ, நின்கதிர் மயங்கு சோதியால் - உன்னுடைய கதிரவன் மயங்குதற்குக் காரணமான
ஒளியுடைமையானே, கண் விளக்கப்பட்டு - கண்கள் விளக்கமடையப்பெற்று,

     தண் தாஅமரை மலர்மேல் - குளிர்ந்த தாமரை மலரிடத்தே, நடந்தாய் என்றும் -
நடந்தருளியவனே என்று கூறியும், தமனீயம் பொன் அணையின்மேல் அமர்ந்தாய் என்றும்
- தமனியம் என்னும் பொன்னாலியன்ற திரு அணையின் மேல் எழுந்தருளியவனே என்று
கூறியும், வண்டு ஆர் அசோகின் நிழல்வாய் அமர்ந்தாய் என்றும் - வண்டுகள் மொய்க்கும்
அசோக மரத்தினது நிழலின் கண்ணே வீற்றிருந்தருள்பவனே என்று கூறியும், வாழ்த்தினால்,
யானறியளவையின் ஏத்தித்தொழுதால், வானவர் தம் கோவே - தேவ தேவனே, வாராயோ
- வந்தருள மாட்டாயோ, வந்தருள்வாயோ யான் அறிகிலேன், (எ - று)

(800)

 
1911. 1கருவார்ந்த பொருணிகழ்வுங் காலங்கண் மூன்றுங்
     கடையிலா 2நன்ஞானக் கதிரகத்த வாகி
3ஒருவாதிங் கவ்வொளியின் னுள்ள வாகில்
     4உலகெல்லா நின்னுளத்தே யொளிக்க வேண்டா
5திருவார்ந்த தண்மார்ப தேவாதி தேவ
     திரளரைய 6செந்தளிர சோகமர்ந்த செல்வ
வருவாரும் வையகமு நீயும்வே றாகி
     மணிமேனி மாலே மயக்குவதிங் கென்னோ.
 
     (இ - ள்.) கருஆர்ந்த பொருள் நிகழ்வும் - உலகந்தோன்றுதற்குக் கருவாகப்
பொருந்திய புற்கல முதலிய பொருள்களின் நிகழ்ச்சியும், காலங்கள் மூன்றும் -
இந்நிகழ்ச்சிக்குக் காரணமான இறப்பு நிகழ்வு எதிர்வென்னும் மூவகைக் காலங்களும்,
கடையிலா நன்ஞானக் கதிர் அகத்தவாகி -
 

     (பாடம்) 1 கருவார். 2 ஞானக். 3 ஒருவாத தவவ்வொளியிலுள்ளதாகி.

     4 உலகெலா. 5திருவார், திருவாரகன் மார்ப. 6செந்தாள.