பக்கம் : 1191
 
  மன்ன னறியுந் திருவற மாண்பினை
என்னை வினவிய தென்னைகொ லென்றான்.
 
     (இ - ள்.) வன்ன மணிமுடி மன்னன் இருந்திட - நிறமமைந்த மணிகளானியன்ற
முடியையுடைய பயாபதி வேந்தன் நும்பால் உளனாக, இன்னியல் செல்வம் எனைப்பல
எய்திய - இனிய இயல்பினையுடைய செல்வங்கள் எத்துணையும் பலவாயவற்றைப்
பெற்றுள்ள, மன்னன் அறியும் திரு அறம் - அம் மன்னனாலே அறியப்பட்டுள்ள சிறந்த
அறவுரையின், மாண்பினை - பெருமைகளை, என்னை வினவியது என்னைகொல் என்றான்
- என்னைக் கூறும்படி வேண்டிக் கோடற்குக் காரணம் யாது, என்று முனிவன் வினவினான்,
கொல்: அசை, (எ - று.)

     மணிமுடி மன்னன் திருவறம் உயர்ந்தோன் நும்பாலிருக்க அவன் பால் வினவி
அறிந்து கொள்ளாமல் என்னை வினவியதன் காரணம் என்னை என்றான் என்க.

(807)

 

அமைச்சர் அரசனியல்பு உரைத்தல்

1918. அடிக ளடிசி லமைந்த தயில்வான்
முடிய முயலு முறைமை யறியான்
நெடிதி னதுவறு நீர்மையு மோரான்
வடிவமர் செல்வன் வகையு மதுவே.
 
     (இ - ள்.) அடிகள் - அடிகளே, அடிசில் அமைந்தது அயில்வான் - ஒரு சாத்தன்
சமைக்கப்பட்ட உண்டியினை உண்பான், முடிய முயலும் முறைமை அறியான் -
அத்துணையே அன்றி, அவ்வுணவினை உண்டாக்குதற்கு முயலவேண்டிய முயற்சியின்
தன்மையும் அறியமாட்டான், நெடிதின் அது அறும் நீர்மையும் ஓரான் - தான் உண்ட
அவ்வுணவு எவ்வாறு அற்றொழிகின்ற தென்பதையும் அறியான், வடிவமர் செல்வன் -
அழகு மிக்க செல்வமுடைய எம்மரசன், வகையும் அதுவே - முறையும் அச்சாத்தன் முறையேயாம். (எ - று.)

     ஊழ்வினையாலே தரப்படுகின்ற நுகர்ச்சிகளை நுகருமாத்திரையன்றி யாங்கள்
பிறிதொன்றும் முணரோம் என்றபடி. அரசனுக்கும் தமக்கும் வேற்றுமை கருதாராய்த்
தம்மியல்பை அரசன் மேலேற்றிக்கூறினார்,

(808)

 

1919. மந்திர மாந்தர் மொழிதலும் வானிடை
அந்தரம் வாழு மமரர் வழிபடும்
தந்திர1 ஞ் சான்ற தவத்திற் கரசனும்
இந்திர னன்னாற் கெடுத்துரைக் கின்றான்.
 

     (பாடம்) 1 ஞான்ற.