பக்கம் : 1195
 
 
1926. 1பத்தடம் பத்தொடு மூன்றா மவற்றிடை
ஒத்த வுறையு ளிலக்கமொர் முப்பது
2கொத்தெரி வெம்பவர் கும்பிக் குழியவை
இத்துணை யென்பதொ ரெல்லை யிலவே.
 
     (இ - ள்.) பத்தடம் - அம்முதல் நரகத்தில் புரை, பத்தொடு மூன்றாம் -
பதின்மூன்றாகும், ஒத்த உறையுள் - உயிர்கள் வாழும் இடங்கள், இலக்கம் ஒர்முப்பது -
முப்பது நூறாயிரமாம், கொத்து எரிவெம்பு அவர் - கொத்தாக எரிகின்ற நெருப்புகளிலே
வேவாநின்ற அந்நரகர்கள் அழுந்தும், கும்பிக்குழி யவை - சேற்றுக்குழிகளோ எனில்,
இத்துணை என்பதோர் எல்லைஇல - இவ்வளவின என்னும் ஒரு வரையறையுடையன
அல்லவாம், (எ - று.)

     புத்தடம் - புரை; அடுக்கு

     அந்நகரத்தே பதின்மூன்று புரையும் முப்பது நூறாயிரம் உறையுளும் எல்லையில்லாத
கும்பிக்குழிகளும் உள்ளன என்க.

     “ஒன்று மூன்றைந்து மேழுமொன்பதும் பத்தோடுஒன்று
     நின்ற மூன்றொடுபத்து நிரயத்துப் புரைகள் மேன்மேல்Ó
என்றார் பிறரும் (மேரு - 937)

(816)

 
1927. பேழைப் பிளவும் பிலத்தின் முகங்களும்
தாழிப் பதலையும் போலுந் தகையன
ஆழப் பரந்த வழுக லளறவை
பீழைப் பதகர் பிறக்கு மிடமே.
 

     (பாடம்) 1 பத்தொடை டம்பத்தொடு. 2 தொத்தெரி வெம்ப வரும்பி.