உரைப்பினுமாம். முற்பிறப்பிலே தேவலோகத்தில் வாழ்ந்த உயிர் பிற்பிறப்பில் இம்மகளாகப் பிறந்ததென்பார், “ஏமநல்லுலகின் னிழிந்து தோன்றினாள்“ என்றார். உலகின்னிழிந்து: னகரமெய் விரித்தல் விகாரம். ஸ்வயம்பிரபா - என்னும் வடசொல் இயற்கை யொளியுடையாள் என்று பொருள்தரும். |
( 32 ) |
சுயம்பிரபையின் அழகுச் சிறப்பு |
151. | கங்கை நீரன ஞான்ற கதிரிளந் திங்க ளாற்றொழப் பட்டது செக்கர்வான் மங்கை மார்பிறப் பும்மட மாதரிந் நங்கை யாற்றொழப் பாடு நவின்றதே. |
(இ - ள்.) செக்கர்வான் - செவ்வானமானது; கங்கை நீரன - கங்கையாற்றின் நீரைப்போல்; ஞான்ற - ஒழுகிய; கதிர் - ஒளிகளையுடைய; இளந் திங்களால் - பிறைத் திங்களினால்; தொழப்பட்டது - வணங்கப் பெற்றது; அதைப்போல; மங்கைமார் பிறப்பும் - பெண்களின் பிறப்பும்; மடமாதர் இந் நங்கையால் - மடமையையும் அழகையுமுடைய இச்சிறந்த பெண்ணால்; தொழப்பாடு நவின்றது - வணங்கப்படுதற் றன்மையைப் பெற்றது, (எ - று.) தன்கண் பிறைதோன்றலால் செக்கர்வானம் தொழப்படுகின்றது. தன்கண் சுயம்பிரபை தோன்றலால் பெண்குலம்தொழுந் தகுதியுடைத்தாயிற்று என்பது கருத்து. ஞான்ற - நான்ற; முதற்போலி. நால்; பகுதி. மாலைப்பொழுதில் பிறையைத் தொழுதல் மரபு. மடமாதர் - மடமையையுடைய மாதர். மடமையாவது எல்லாம் அறிந்தும் ஒன்றையும் அறியாது போன்றிருக்குந் தன்மை. |
( 33 ) |
முகம் கண் புருவம் இடை ஆகியவைகள் |
152. | வண்டு சூழ்மலர் போன்றள கக்கொடி கொண்டு சூழ்ந்தது குண்டல வாண்முகங் 1கெண்டை கண்கிள ரும்புரு வஞ்சிலை உண்டு கொல்லென வுண்டும ருங்குலே. |
(இ - ள்.) குண்டல வாள்முகம் - காதணியின் ஒளிவீசப் பெற்ற சுயம்பிரபையின் முகம்; வண்டுசூழ் மலர்போன்று - வண்டுகள் சூழப்பெற்ற செந்தாமரை மலரைப்போல; அளகக் கொடி கொண்டுசூழ்ந்தது - கூந்தலின் |
|
(பாடம்) 1. கெண்டை போன்றன கண் புருவச்சிலை. |